சுரங்கத்திற்குள் புகுந்த வெள்ளநீர் துயரத்தில்., துரித நடவடிக்கையால் தப்பித்த உயிர்கள்..! - Seithipunal
Seithipunal


சீன நாட்டில் உள்ள தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சிசுவான் மாகாணத்தில் யிபின் நகரமாக உள்ளது. இந்த நகரத்தில் உள்ள சான்மசு நிலக்கரி சுரங்கத்தில் கடந்த சனிக்கிழமையன்று திடீரென வெள்ளம் உள்ளே புகுந்தது.

இந்த விபத்தில் 5 பேர் பலியாகினர். மேலும்., 30 ஊழியர்கள் மாயமாகி இருந்தனர். இதனையடுத்து சுரங்கத்துக்குள் சிக்கி இருக்கும் தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. 

இந்த நிலையில் 13 மீட்பு குழு உட்பட மொத்தமாக 250 வீரர்கள் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். நேற்று சுரங்கத்தில் சிக்கியிருந்த 13 பணியாளர்களை 80 மணிநேர தேடுதலுக்கு பின்னர் பத்திரமாக மீட்டுள்ளனர். 

china coal mine accident,

அதிகாலை 3 மணிக்கு மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கும்போது சுரங்கத்திற்குள் இரும்பு கம்பியை வீரர்கள் பலமாக தட்டியதில்., பதில் குரல் பணியாளர்களின் சார்பாக எழுப்பப்பட்டதை அடுத்து 13 பேர் விரைவாக மீட்கப்பட்டுள்ளார். 

மேலும்., சுரங்கத்தின் நீளம் 10 கிமீ என்பதாலும்., முட்டளவு நீரில் மீட்பு படையினர் தேவையான உபகரணங்களை தூக்கிக்கொண்டு சென்றுள்ளனர். சூரத்தில் மொத்தமாக நீர் சூழ்ந்ததால் தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் காற்றோட்டம் முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்து. 

சுரங்கத்திற்குள் தற்போது எஞ்சியுள்ள நபர்களை மீட்கும் பணியானது தொடர்ந்து நடைபெறும் வரும் நிலையில்., இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக., மீட்புப்படை அதிகாரி தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in china workers rescued form mine


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->