சீனா உள்ளிட்ட ஐந்து நாடுகளில் கரோனோ வைரஸ் பாதிப்பு.. அதிர்ச்சியாக உயர்ந்த பலி எண்ணிக்கை.!! - Seithipunal
Seithipunal


சீன நாட்டில் உள்ள உஹான் பகுதியில் கரோனா என்ற புதியவகை வைரஸ் பரவியிருப்பது அண்மையில் கண்டறியப்பட்ட நிலையில், இந்த வைரஸின் காரணமாக பாதிக்கப்பட்ட நபர்கள் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

இவர்கள் அனைவரும் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த வைரசால் பாதிக்கப்பட்ட சீன நாட்டினை சார்ந்த 66 வயது முதியவர் மற்றும் 48 வயதான பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இதனையடுத்து இந்த வைரஸ் தொடர்ந்து பரவிக்கொண்டு வருவதால், இந்த வைரசால் தற்போது வரை சுமார் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைப்போன்று அங்குள்ள உஹான், பீஜிங், ஷாங்காய், ஸெனான், தியான்ஜின் மற்றும் ஜேஜியாங் போன்ற பகுதியிலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தற்போது வரை 400 பேர் மட்டுமே இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வைரஸ் பாதிப்பை கண்டறிந்துள்ள உஹான் பகுதியில் மக்கள் பயணம் செல்ல தடை விதித்து அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 

இந்த வைரஸ் தாக்கம் அமெரிக்கா, தைவான், ஜப்பான், தென்கொரியா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நான்கு நாடுகளுக்கும் பரவியுள்ளதாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸிலின் தாக்கத்தால் சுவாசக்கோளாறு பிரச்சனை ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகிறது. 

மேலும், நேற்று (22/01/2020) வரை சுமார் 7 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் தெரிவிக்கிப்பட்ட நிலையில், தற்போது மேலும் 8 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தமாக 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சுமார் 571 பேர் சீனா முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in china peoples affected and died coronovirus


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->