சுழற்றியடித்த காற்றால் நாலாபுறமும் சூழ்ந்த தீ.. 19 தீயணைப்பு வீரர்கள் பரிதாப பலி.!! - Seithipunal
Seithipunal


சீனாவில் துவங்கிய கரோனா வைரஸின் தாக்கம் இப்போதுதான் குறைந்து, அங்குள்ள மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இந்த நிலையில், அங்குள்ள பகுதியில் பிடித்த காட்டுத்தீயில் சிக்கி 16 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சீனாவில் உள்ள சின்சுவாங் மாகாணத்தில் இருக்கும் லியாங்க்சன் பகுதியில் பண்ணையில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த சமயத்தில் வீசிய பலத்த காற்றின் காரணமாக அருகில் இருந்த காட்டுப்பகுதிக்கு தீ பரவவே, பல ஏக்கர் நிலப்பரப்பானது கொழுந்து விட்டு எரிந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து அங்குள்ள சுமார் 1200 குடியிருப்பு பகுதியில் இருந்த மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டு, 100 க்கும் அதிகமான தீயணைப்பு வாகனத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் விரைந்து தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். 

காட்டுத்தீ நாலாபுறமும் எரிந்த நிலையில், 19 தீயணைப்பு படையினர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் 3 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதியாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in china forest fire 19 fire and dept officers died


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->