இலவச வீட்டிற்காக 23 திருமணம்..! இறுதியாக தாயை திருமணம் செய்து கொண்ட அவலம்..! காவல் நிலையத்தில் கண்ணீர் கதறல்.!! - Seithipunal
Seithipunal


சீனாவில் உள்ள ஷெஜியாங் மாகாணத்தில் இருக்கும் லிஷூய் நகரில் இருக்கும் கிராமத்தில்., நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மக்களுக்கு இலவசமாக வீடு கட்டி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், தற்போது அம்மக்கள் வசித்து வரும் இடத்தினை கையகப்படுத்தி., இந்த நிலத்திற்கு பதிலாக மற்றொரு இடத்தில் சுமார் 430 சதுர அடி அளவில் வீடுகளை இலவசமாக கட்டி தருகிறது. 

இந்த திட்டத்தின் படி., அம்மக்களுக்கு நிலம் இருந்தாலும்., இல்லை என்றாலும் அவர்களுக்கு வீடு வழங்கப்படும். இதன் அடிப்படையில்., இந்த திட்டத்திற்கு அந்த கிராம மக்கள் அனைவரும் தகுதியாக இருக்கும் நிலையில்., இந்த திட்டத்தினை சாதகமாக உபயோகம் செய்து கொண்ட குடும்பத்தினர் 11 வீடுகளை முறைகேடாக பெற்றுள்ளது வெளிவந்துள்ளது. 

china free house marriage 23 times,

இந்த கிராமத்தில் வசித்து வரும் பாண் என்பவரின் குடும்பத்தினர்., தங்களின் உறவினரை மீண்டும் மீண்டும் திருமணம் செய்து கொண்ட நிலையில்., இந்த ஏமாற்றும் பணியை செய்துள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் இதே கிராமத்தை சார்ந்த ஷீ என்ற பெண்மணி., திருமணம் முடிந்து வசித்து வந்த நிலையில்., திருமணத்திற்கு பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். 

இவர்களின் விவகாரத்திற்கு பின்னர் சுமார் ஆறு நாட்கள் கழித்து இலவச வீட்டிற்கான திட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில்., இவரின் விவகாரத்தை தள்ளி வைத்து விட்டு., மீண்டும் சேர்ந்து வீடொன்றை பெற்றுள்ளனர். இதற்கு பின்னர் மீண்டும் விவாகரத்து செய்து கொண்டு., தனது அண்ணியின் தங்கையை திருமணம் செய்து மூன்றாவது வீட்டையும் வாங்கியுள்ளார். 

marriage, china marriage, chinesh marriage, சீன  திருமணம், சீன திருமண முறை,

இதனைப்போன்று பாணின் தந்தையும் தனது குடும்ப உறுப்பினர்களை திருமணம் செய்து வீடுகளை பெற்றுள்ளார். வீட்டின் மீதுள்ள அலாதி ஆவலால்., தனது தாயை திருமணம் செய்து கொண்டு வீடும் பெற்றுள்ளார். இப்படியாக மொத்தம் 11 குடும்ப உறுப்பினர்களை., சுமார் 23 முறை திருமணம் செய்து கொண்டு இருந்துள்ளனர். இவர்களின் திட்டப்படி 11 வீடுகள் இவர்களின் கைவசம் வந்துள்ளது. 

இந்த விஷயத்தை கண்டறிந்த கிராம மேம்பாட்டு அதிகாரிகள்., இவர்களின் மோசடி குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்த காவல் துறையினர்., வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில்., இவர்களின் மோசடி உறுதி செய்யப்பட்டு., குடும்பத்தினர் 11 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில்., முக்கிய குற்றவாளியான நாள்வரை தவிர்த்து., மீதமுள்ள ஏழுபேரும் ஜாமினில் வெளியாகியுள்ளனர்..

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in china family members married 23 times for free home govt plan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->