கரோனா கண்காணிப்பு மையம் இடிந்து விழுந்த விபத்து... 10 பேர் பரிதாப பலி.. 23 பேர் நிலை என்ன?..!! - Seithipunal
Seithipunal


சீன நாட்டினை மையமாக வைத்து உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வரை சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கரோனா பாதிப்பால் உலகளவில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், சீன நாட்டில் உள்ள பீஜியான் மாகாணத்தில் உள்ள குவான்சு நகரில் அமைந்துள்ள ஆறு மாடி விடுதியொன்று கரோனா கண்காணிப்பு முகமாக தற்காலிகமாக மாற்றப்பட்டு செயல்பட்டு வந்தது.

கரோனா பாதிப்பு தொடர்பான சந்தேகம் உள்ள நபர்கள் விடுதியில் தங்கவைக்கப்ட்ட நிலையில், இந்த விடுதி நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி சுமார் 7.30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்துள்ளது. 

இந்த விடுதியில் உள்ள அறையில் தங்கியிருந்த 70 க்கும் மேற்பட்ட நபர்கள் பரிதாபமாக இடிபாடுகளில் சிக்கிக்கொண்டுள்ளனர். இவர்களை மீட்பதற்கு சுமார் 700 மீட்பு குழு வீரர்கள் விரைந்து பணியை துவங்கிய நிலையில், 38 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். 

இந்த பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கி சுமார் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைப்போன்று மீதமுள்ள 23 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இவர்கள் உயிரிழந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in china coronavirus inspection building collapese 10 peoples died


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->