வந்த வேகத்தில் கட்டுக்குள் வைத்த சீனா... மளமளவென குறைந்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை.!! - Seithipunal
Seithipunal


சீன நாட்டினை மையமாக வைத்து பரவி வந்த கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளில் சுமார் 182 க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வைரஸின் தாக்கத்திற்கு தற்போதுவரை 275,864 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11,398 பேர் பலியாகியுள்ளனர். இந்த வைரஸை கட்டுக்குள் வைக்கும் நடவடிக்கையில் அந்தந்த நாட்டு அரசாங்கம் தேவையான நடவடிக்கையை எடுத்து வருகின்றது. 

மருத்துவ நிபுணர்களும் இதற்கான மருந்துகளை கண்டறியும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்தியாவில் பரவிய கரோனா வைரஸ் 249 பேருக்கு பரவியுள்ளது. மேலும், 5 பேர் பலியாகியுள்ளனர். மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இத்தாலி நாட்டில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 627 பலியாகியிருந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், சீனாவில் கரோனா வைரஸின் பிறப்பிடமான யூகான் நகரில் அரசு மேற்கொண்ட பல்வேறு கட்ட நடவடிக்கைக்கு பின்னர் புதிய நபர்கள் தொற்றுக்களால் அவதியுறவில்லை. இருப்பினும், யூகான் நகரை சார்ந்த 50 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதனைப்போன்று யூகான் நகரம் மட்டுமல்லாது, மொத்த சீன நாட்டை சேர்த்தும் புதிய நோயாளிகள் இல்லை என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், நேற்று 3 பேர் மட்டுமே கரோனாவால் உயிரிழந்து இருந்தனர். வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் சுமார் 228 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in china corona virus ukhan city no new patients admit in hospital


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->