நிலக்கரி சுரங்கத்தில் புகுந்த வெள்ளம்... பரிதாபமாக பலியான ஊழியர்கள்.. 14 பேர் கதி என்ன?...!! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதிலும் விபத்துகள் என்பது தொடர்கதையாகியுள்ளது. இதனால் பல உயிரிழப்புகள் அரங்கேறி வருகிறது. மேலும்., நிலக்கரி சுரங்கம் போன்ற பகுதிகளில் அவ்வப்போது ஏற்படும் விபத்துகளால் மக்கள் பரிதாபமாக உயிரிழப்பது தொடர்ந்து கொண்டே வருகிறது.

சீன நாட்டில் உள்ள தென்மேற்கு பகுதியில் இருக்கும் காங்கிஸியான் கவுண்டி பகுதியில் இருக்கும் சிசுவான் நிலக்கரி தொழிற்சாலை குழுமத்துடைய பராங் நிறுவனம் சார்பாக நிலக்கரி சுரங்கமானது செயல்பட்டு வருகிறது. 

இந்த சுரங்கத்தின் உள்ளே வெள்ளமானது சூழ்ந்து கொண்டு பெருக்கெடுத்து ஓடிய நிலையில்., இதனை எதிர்பாராத ஊழியர்கள் செய்வதறியாது வெள்ள நீரில் சிக்கி தவிக்கவே., சுரங்கத்தின் உள்ளே இருந்த 4 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். 

மேலும்., 14 பேர் வெள்ளத்தில் சிக்கியுள்ள நிலையில்., மீட்பு பணியானது நடைபெற்று வருகிறது. இவர்களுடன் பணியாற்றும் 200 ஊழியர்களும் இது தொடர்பான மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in china coal mine flood accident workers died and struggled


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->