வீட்டின் முன்னர் விளையாடிய குழந்தையை கடத்தி சென்ற நபர்.! வெளியான அதிர்ச்சி வீடியோ பதிவு.!!  - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் சிறு குழந்தைகளை கடத்தி பணத்திற்காக விற்பனை செய்யும் சம்பவங்களும்., சிறு குழந்தைகளை கடத்தி சிலரின் சுயநல தேவைக்காக அவர்களை வைத்து பிச்சை எடுக்கும் சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்த நிலையில்., முன் விரோதம் காரணமாக குழந்தையை கடத்திய சம்பவமானது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

சீனாவில் உள்ள குவாங்டோங் மாநிலத்தில் உள்ள மூன்று வயதுடைய குழந்தை தனது சகோதரருடன் விளையாடி கொண்டு இருந்துள்ளது. இவர்கள் இருவரும் சேர்ந்து விளையாடிக்கொண்டு இருப்பதால்., பெற்றோர்கள் வீட்டிற்குள் இருந்தவாறு குழந்தைகளை கவனித்து., பின்னர் வீட்டு வேலையை செய்து கொண்டு வந்துள்ளனர். 

இந்த நிலையில்., சுமார் 30 வயதுடைய மர்ம நபர் விளையாடிக்கொண்டு இருந்த குழந்தையை கடத்தி சென்றுள்ளான். சிறுவனை கடத்தி செல்லப்படுவதை கண்ட சகோதரன் குழந்தையை கடத்தி செல்வது குறித்து பெற்றோர்களுக்கு தெரிவித்துள்ளான். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் அங்குள்ள கண்காணிப்பு கேமிராக்களை சோதனை செய்து., இது குறித்த செய்தியை அங்குள்ள பிற காவல் நிலையங்களுக்கும்., மக்களுக்கும் தெரிவித்தனர். இதனை அறிந்த காவல் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட சமயத்தில்., இவனை கண்ட பொதுமக்கள் நையப்புடைத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., குழந்தைகளை பத்திரமாக மீட்டு., குழந்தையை கடத்தி சென்ற நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில்., குழந்தையின் தந்தைக்கும் - குழந்தையை கடத்தி சேர்ந்த நபரான லுவிற்கும் இருந்த முன் விரோதம் காரணமாக குழந்தை கடத்தப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து இது தொடர்பான விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in china baby kidnapped by a man due to family problem


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->