குலுங்கிய தலைநகரம்... அமைதி பேரணியில் ஆடிப்போன அரசு..!!  - Seithipunal
Seithipunal


அமெரிக்க நாட்டில் செல்வ செழிப்பான நாடாக சிலி இருந்து வருகிறது. இங்கு செல்வச்செழிப்பு அதிகளவு இருந்தாலும்., வருமான சமத்துவம் என்பது இல்லாத நிலையானது இருக்கிறது. 

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சியமைப்பின் 36 உறுப்பு நாடுகளில்., சிலி நாட்டில் தான் மோசமான வருமான சமத்துவம் இல்லாத நாடாக திகழ்வதாகவும் கூறப்படுகிறது.  

இந்த தருணத்தில்., முதலில் மெட்ரோ இரயில் சேவைக்கான கட்டணம் உயர்ந்ததை அடுத்து., இதற்கு எதிரான போராட்டம் நடைபெற்றதை அடுத்து., இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில் தீவைப்பு சம்பவம் மற்றும் கொள்ளைகள் நடந்த நிலையில்., இந்த வன்முறைக்கு 16 பேர் பலியாகினர். 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

இந்த போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்ட 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கைது செய்யப்பட்ட நிலையில்., போராட்டத்தின் விளைவாக மெட்ரோ இரயில் கட்டண உயர்வானது நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த தருனத்தில்., சாண்டியாகோ பாதுகாப்பை இராணுவம் கட்டுக்குள் கொண்டு வர., நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. 

போராட்டத்தை குறைக்க இரவு நேரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில்., 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் சார்பாக அமைதி பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 

சிலியின் தலைநகர் சண்டியாகோவில் இருந்து துவங்கிய பேரணியில் சுமார் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரண்டதை அடுத்து., சாண்டியாகோ நகரமே குலுங்கியது. இந்த எண்ணிக்கையானது சிலியின் மக்கள் தொகையில் 5 விழுக்காடை விட அதிகம் என்று கூறப்படுகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in chile country peoples strike due to future


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->