தலையில் உள்ள கட்டியை அகற்ற ஆபரேஷன்.. வயலின் வாசித்து பயத்தை எதிர்கொண்ட பெண்மணி.. வைரல் வீடியோ காட்சிகள்.!! - Seithipunal
Seithipunal


பிரிட்டிஷ் நாட்டில் அறுவை சிகிச்சை நடைபெற்றுக்கொண்டு இருக்கும் போதே, பெண்ணொருவர் வயலின் இசைக்கும் வீடியோ காட்சியானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பிரிட்டிஷ் நாட்டினை சார்ந்த பெண்மணியின் பெயர் டாக்மார் டர்னர் (வயது 53). இவர் மூளையில் பிரைன் டர்மர் (Brain Tumor) என்ற பிரச்சனையால் அவதியுற்று வந்துள்ளார். இதற்காக அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், இவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்து அறுவை சிகிச்சைக்கு தயார் செய்துள்ளனர். இந்த சிகிச்சையின் போது தான் வயலின் வாசிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். 

மருத்துவர்கள் இவரது வலதுபக்க கட்டியை அகற்றும் சிக்கலான சோதனையை செய்து கொண்டிருந்த நிலையில், இவர் வயலினை இசைத்தபடி இருந்துள்ளார். மேலும், இது தொடர்பான பெண் தெரிவித்த சமயத்தில், அவருக்கு 10 வயதில் இருந்து வயலின் வாசிப்பதாக தெரிவித்துள்ளார். 

மேலும், இவரது விருப்பத்தை மருத்துவர்களிடம் தெரிவித்த நிலையில், மருத்துவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அறுவை சிகிச்சையின் போது தனது மனம் உடைந்துபோகாமல் இருப்பதற்கு இசையை இசைத்துள்ளார். சுமார் 90 விழுக்காடு கட்டிகளும் அகற்றப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in British girl do surgery with using instrument violin


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->