பிரேசில் மழைவெள்ள பாதிப்பு.. அடுத்தடுத்து வெளியாகும் சோக தகவல்கள்.!! - Seithipunal
Seithipunal


தென்னமெரிக்க நாட்டில் உள்ள பிரேசிலில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சுமார் 59 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

தென்னமெரிக்க நாட்டில் உள்ள பிரேசிலில் உள்ள மினாஸ் ஜெரியாஸ் மாநிலத்தில் இருக்கும் இப்பிரிட் நகரில் கடுமையான மழை பெய்துள்ளது. மேலும், அங்குள்ள பல இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. 

பெரும்பாலான இல்லங்களில் வெள்ளம் புகுந்துள்ளதால், சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்த மழை வெள்ளத்தால் தற்போது வரை 17 பேர் மயமாகியுள்ளதாகவும், 12 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், பிரேசில் வரலாற்றில் 110 வருடங்கள் இல்லாத அளவுக்கு பெய்துள்ளதாகவும் அங்குள்ள வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், பிரேசில் மொத்தமாக சுமார் 40 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

அங்குள்ள 99 நகரங்களில் ஏற்கனவே அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. சுமார் 58 பேர் தற்போதுவரை பலியாகியுள்ளனர், நிலச்சரிவுகள் ஏற்பட்ட இடங்களில் 17 பேர் மாயமாகியிருந்த நிலையில், 13 பேர் பலியாகியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Brazil rain flood and landslide peoples died and injured


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->