இனி இந்த நாட்டிற்கு செல்ல, இந்தியர்களுக்கு விசாவே தேவையில்லை...! பின்ன என்ன கிளம்பிருவோமா?..!! - Seithipunal
Seithipunal


பிரேசில் நாட்டின் தற்போதைய அதிபராக இருந்து வரும் ஜெயின் போல்சோனாரோ இந்திய நாட்டை சார்ந்தவர்கள் மற்றும் சீன நாட்டை சார்ந்த மக்கள் தங்களது நாட்டிற்கு வருகை தர விசா பெற வேண்டியதில்லை என்று அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார். 

இந்த வருடத்தின் துவக்கத்தில் அதிபராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜெயிர் போல்சோனாரோ., சீன நாட்டிற்கு தற்போது அரசுமுறை பயணம் மேற்கொள்வது உறுதியாகியுள்ள நிலையில்., வளர்ந்து வரும் நாடுகளுக்கு சில சலுகையை வழங்க முடிவு செய்துள்ளார். 

Brazil, பிரேசில்,

இவரின் திட்டப்படி வளரும் நாடுகள் என்ற அடிப்படையில்., இந்தியா மற்றும் சீன நாட்டிற்கு இச்சலுகையை அறிவித்துள்ளார். இந்த வருடத்தின் துவக்கத்தில் அமெரிக்கா., கனடா., ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலிய நாட்டின் சுற்றுலா பயணிகள் விசா பெற வேண்டாம் என்று அறிவித்திருந்தார். 

இந்த நிலையில்., தற்போது இந்தியா மற்றும் சீன நாட்டிற்கு இதே செயல்முறையை அறிவித்துள்ளார். மேலும்., பிரேசில் நாட்டில் ரியோ டி ஜெனிரோ., சாய் பாவ்லோ மற்றும் சால்வடார்., ப்ரேசிலா போன்ற முக்கியமான சுற்றுலாத்தலங்கள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

In Brazil no visa required to entry for Indians and china peoples


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->