நண்பர்களின் முன்னிலையில் மனைவி சதக்.. சதக்.! அற்ப காரணத்திற்க்காக அரங்கேறிய கொடூரம்.!! என்ன காரணம் தெரியுமா?.!!  - Seithipunal
Seithipunal


இந்திய நாட்டை பூர்வீகமாக கொண்டவர் டக்ளஸ் டெரிக். இவர் கடந்த 2017 ம் வருடத்தில் ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அந்த சமயத்தில் ஆஸ்திரேலிய பெண்மணியான மேரி பிரீமேனை சந்தித்துள்ளார். இவர்களின் சந்திப்பிற்கு பின்னர் நண்பர்களாக பழகி வந்த நிலையில்., இருவருக்கும் இடையே காதல் வந்துள்ளது. இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில்., பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 

இந்த நிலையில்., திருமணம் முடிந்த சில மாதங்களுக்கு பின்னர் டக்ளசின் சில நடவடிக்கைகள் பிடிக்காமல் இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நேரத்தில் இவர்கள் இருவரும் நண்பர்களுடன் மது அருந்தியுள்ளனர். அந்த சமயத்தில் இவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் துவங்கிய பிரச்சனையானது., ஆண்கள் சிறத்தவர்களா? அல்லது பெண் பெண்கள் சிறந்தவர்களா? என்ற பேச்சுவார்த்தை துவங்கி தகராறு எழுந்துள்ளது.

இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதமானது அதிகரித்த நிலையில்., ஆத்திரமடைந்த டக்ளஸ் கத்தியால் தனது மனைவியை சுமார் 10 முறை தொடர்ந்து குத்தி கொலை செய்துள்ளார். ஆத்திரத்தில் கொலை செய்து விட்டோம் என்று காவல் நிலையத்தில் தானாகவே சென்று சரணடைந்துள்ளார். பின்னர் இது குறித்த வழக்கு விசாரணையானது நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

அந்த விசாரணயின் முடிவில்., ஆஸ்திரேலிய நாட்டின் குடியுரிமையை பெறுவதற்காக திருமணம் செய்து பின்னர் அவரை விவாகரத்து செய்து விடலாம் என்ற எண்ணத்தில் இருந்துள்ளார். அதற்கு எந்த விதமான அவசியமும் கைகூடாத பட்சத்தில்., ஆத்திரமடைந்த அவர் தகுந்த நேரத்தில் மனைவியை கொலை செய்துள்ளார். மேலும்., அவர் கத்தியால் குத்தும் போது தடுக்க வந்த நண்பரையும் உதறிவிட்டு தொடர்ந்து குத்தியுள்ளார் என்று தெரியவந்துள்ளது.   

இந்த தகவலானது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர்., இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி சுமார் 25 வருடங்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். குடியுரிமைக்காக பெண்ணை கொலை செய்த சம்பவமானது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Australia wife killed by husband after marriage getting green card


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->