வீடியோ..! அடிக்கும் வெயிலில் அமைதியாக படுக்காமல்., பன்றிக்கறியை அடுப்பின்றி சமைத்த நபர்.! - Seithipunal
Seithipunal


நாம் வாழும் உலகின் பல்வேறு நாடுகளில் பலதரப்பட்ட காலநிலைகள் மற்றும் பருவ மாறுபாடுகள் உள்ளது. நமது செயலினால் புவி வெப்பமயமாதல் என்ற பிரச்சனை தற்போது பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. 

இந்த நிலையில்., ஆஸ்திரேலிய நாட்டினை பொறுத்த வரையில் பகல் வேளைகளில் வெப்பம் சுட்டெரிக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அந்த வகையில்., பகல் வேளையில் சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாக அரங்கேறிய ருசிகர சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. 

அடுப்புகள் இல்லாமல் சூரியனின் வெப்பத்தால் கார் அதிகளவு சூடானதால் பன்றிக்கறியை அடுப்பு இல்லாமல் சமைக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள பெர்த் நகரில் இருக்கும் ஸ்டூ பெங்கல்லி என்ற நபர் பகல் வேளையில் காரின் இருக்கையில் சமைக்காத பன்றியை வைத்த நிலையில்., சுமார் 10 மணிநேரத்திற்கு பின்னர் வெயிலின் காரணமாக பன்றி இறைச்சி நன்றாக வெந்துள்ளதாக முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

இந்த பதிவானது தற்போது வைரலாகி வரும் நிலையில்., வெயிலின் தாக்கத்தால் இருந்து தப்பித்துக்கொள்ளுமாறும் மக்கள் அறிவுரை வழங்கி வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in australia pig cooking completed without fire


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->