இரட்டை கருப்பை., இனப்பெருக்க உறுப்புக்கள் கொண்ட பெண்ணிற்கு நான்கு குழந்தைகள்..! மருத்துவ துறையில் அதிசய ஆச்சர்யம்.!! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள நகரில் வசித்து வரும் பெண்மணியின் லாரன் கட்டர் (வயது 34). இவர் அங்குள்ள ஆரம்ப பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவருக்கு தன்னுடைய 16 வயதில் ஏற்பட்ட உடல்நல பிரச்சனையை அடுத்து., மாதவிடாய் தொடர்பான பிரச்சனையால் அவதியுற்றார். இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள்., இவருக்கு பி.சி.ஓ.டி என்று அழைக்கப்படும் சினைப்பையில் நீர்கட்டிகள் பிரச்சனைகள் உள்ளதாக தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து இவரை பரிசோதனை செய்ய முடிவெடுத்த மருத்துவர்கள்., இவருக்கு "அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்" சோதனையை செய்தார். இந்த சோதனையில் இவருக்கு "யூட்ரஸ் டிடெல்பிஸ்" என்ற பிரச்சனை இருப்பதை கண்டறிந்துள்ளனர். இந்த பிரச்சனையானது மிகவும் அரிதான பிரச்சனை என்பதாலும்., இவருக்கு பிற பெண்களை போல அல்லாமல் இரட்டை கருப்பை., கருப்பை வாய்., பிறப்புறுப்பு மற்றும் இனப்பெருக்க உறுப்புக்கள் இருக்கும் என்றும் தெரிவித்தனர். 

மேலும்., இவருக்கு திருமணம் முடியும் பட்சத்திலும்., துணையுடன் தாம்பத்தியம் மேற்கொண்டு குழந்தையை பெற்றெடுக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் திருமணம் முடிந்த பின்னர்., துணையுடன் இயல்பான தாம்பத்தியம் மேற்கொள்வதற்கு வசதியாக அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார். இவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டாலும்., இரட்டை கருப்பை காரணமாக கருச்சிதைவு அல்லது குழந்தை இறந்து பிறக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். 

மாதவிடாய், மாதவிடாய் வலி, menstruation, menstruation pain, periods,

இதனால் வருத்தத்தில் இருந்த லாரனிற்கு., மன ஆறுதல் தரும் வகையில் கிடைத்த நண்பரை., தனது 17 வயதில் காதலிக்க துவங்கிய லாரன்., தனது காதலரான பென்னை கடந்த 2012 ஆம் வருடத்தில் திருமணமும் செய்து கொண்டார். திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதிகளுக்கு., பிறரை போலவே நாமும் குழந்தைகளுடன் வாழ வேனெடும் என்ற ஆவல் வந்துள்ளது. 

இதனையடுத்து தனது ஆசை குறித்து மனைவி லாரனிடம் பென் தெரிவித்ததை அடுத்து., இந்த தருணத்தில் கடந்த 2013 ஆம் வருடத்தில் லாரன் கருத்தரித்தார். இந்த கரு., லாரனின் வலது கருப்பையில் கருவாகியிருந்த நிலையில்., கடந்த 2014 ஜூன் மதத்தின் போது அறுவை சிகிச்சையின் மூலமாக., அமேலி அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். 

முதல் குழந்தைக்கு பின்னர் இருவருக்கும் அடுத்த குழந்தை பெற்றுக்கொள்ள ஆவல் வந்ததை அடுத்து., இருவரும் இணைந்த நிலையில்., இந்த முறை இடதுபுற கருப்பையில் கரு உருவாகியுள்ளது. இந்த சமயத்தில்., பிறந்த ஆண் குழந்தைக்கு ஹார்வி என்றும் பெயர் சூட்டியுள்ளனர். இதற்கு பின்னர் குழந்தைகள் போதும் என்று கருதிய தம்பதிகள்., கருத்தடைக்காக மாத்திரைகளை லாரன் எடுத்துள்ளார். 

இந்த மாத்திரையின் விளைவாக லாரனிற்கு தலைவலி தொடர்ந்து ஏற்பட்டதை அடுத்து., மருத்துவரிடம் சென்று ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த தருணத்தில்., மருத்துவர் கருத்தடைக்கான சாதனம் உபயோகம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். இதனை ஏற்ற லாரன் கருத்தடை சாதனத்தை பொருத்திக்கொண்டு., தாம்பத்தியம் மேற்கொண்ட நிலையில்., மீண்டும் கருத்தரித்துள்ளார். 

இந்த சமயத்தில்., லாரனிற்கு இரட்டை கருவானது ஒரே கருப்பையில் இருந்துள்ளது. இதனைத்தொடர்ந்து உடலுக்கு ஓய்வு எடுக்க கூறி மருத்துவர்கள் கூறியதை அடுத்து., உடலுக்கு ஓய்வு வழங்கி இருந்துள்ளார். இந்த தருணத்தில்., கடந்த வருடத்தின் போது மாயா மற்றும் ஈவி என்ற குழந்தைகளை பெற்றெடுத்தார். இவர்கள் இருவரும் தங்களுக்கு நாலு குழந்தைகளை பெற்றெடுத்து மகிழ்வாக வாழ்ந்து வருகின்றனர். மேலும்., இரட்டை கருப்பை., கருப்பை வாய் மற்றும் இனப்பெருக்க உறுப்புகளை கொண்ட பெண்., நான்கு குழந்தைகளை பெற்றெடுத்து., மகிழ்வுடன் இருப்பது தெரியவந்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Australia girl have twice sexual part and uterus birth 4 babies


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->