பற்றி எரியும் காடுகள்... உயிரிழக்கும் கரடிகள்... தினமும் பொதுமக்கள்..!! - Seithipunal
Seithipunal


கடந்த சில மாதங்களாகவே உலகின் பல்வேறு பகுதியில் தீ விபத்தானது ஏற்பட்டு காட்டுப்பகுதிகள் அனைத்தும் தீக்கு இரையாகி வருகிறது. மேலும்., கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக அமேசான் காடுகளின் பெரும்பாலான பகுதிகள் தீக்கிரையானது. 

இதனால் அங்குள்ள மரங்கள்., காடுகளில் இருக்கும் விலங்குகள் மற்றும் பறவைகள் என அனைத்தும் பாதிக்கப்பட்டதை அடுத்து மக்கள் அனைவரும் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர். மேலும்., தற்போது அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பகுதியில் காட்டு தீயானது பரவி வருகிறது. 

இந்த நிலையில்., ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள வடக்கு கடற்கரை பகுதியில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் காட்டு தீயானது பரவியுள்ளது. இதனை அணைப்பதற்கு அங்குள்ள தீயணைப்பு பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையில்., மக்கள் யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுமட்டுமல்லாது மக்கள் யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் இல்லாத பட்சத்திலும்., அங்குள்ள வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்றும்., அங்குள்ள மரக்கரடிகள் உயிரிழந்து இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்., சிட்னி நகரம் முழுவதும் கரும்புகையானது சூழ்ந்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Australia forest fire peoples panic and bears died


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->