முதலையை முழுவதுமாக விழுங்கிய பைத்தான் அனகோண்டா.!! வெளியான அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்.!! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ள காட்டில் புகைப்பட கலைஞரான மார்ட்டின் முல்லர் என்பவர் இயற்கை புகைப்படங்களை பதிவு செய்து கொண்டு இருந்தார். இந்த சமயத்தில்., அங்குள்ள ஆற்றுப்படுகை ஓரமாக ஆலிவ் வகையை சார்ந்த அனகோண்டா பாம்பானது வந்துள்ளது. இந்த நேரத்தில்., அங்கு இருந்த முதலையை கவனித்த பாம்பு., முதலையை உண்ண வேண்டும் என்று முடிவு செய்துள்ளது. 

இதனையடுத்து பாம்பு முதலையை தனது உடலால் சுற்றிய நிலையில்., முதலையை முழுவதுமாக சுற்றி நெரித்து கொன்று கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டுள்ளது. இந்த காட்சிகள் அனைத்தையும் புகைப்படமாக தொடர்ந்து புகைப்படக்கலைஞர் எடுத்து இணையத்தில் பதிவிட்டதை தொடர்ந்து இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. 

australia python anaconda, australia, python anaconda,

இவரால் பதிவு செய்யப்பட்ட அனகோண்டா பாம்பானது மேற்கு ஆஸ்திரேலிய பகுதியில் காணப்படும் இரண்டவது பெரிய அனகோண்டா பாம்பாகும். அங்குள்ள மொழிகளில் பைந்தான் என்று அழைக்கப்படும் இந்த பாம்பின் வாயானது இரப்பர் போன்று நெகிழும் தன்மையை கொண்டதாகும். இந்த பாம்பிற்கு மேல் தாடைகள் மற்றும் கீழ் தாடைகள் தனித்தனியாக அமையப்பெற்றுள்ளதால் மான்., முதலைகள் முதல் மனிதர்களையும் எளிதில் கொன்று உட்கொள்ளும். 

australia python anaconda, australia, python anaconda,

இந்த வகையான பாம்பானது ஆஸ்திரேலிய நாட்டை பூர்வீகமாக கொண்டும்., சுமார் 13 அடி நீளம் (3.9 மீ) வரை வளரும் தன்மையை கொண்டது. இதுமட்டுமல்லாது கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னதாக இந்தோனேசிய நாட்டில் 23 அடி நீளமுள்ள அனகோண்டா பாம்பின் வயிற்றில் இருந்து இறந்த மனிதரின் உடல் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Australia anaconda eat crocodile viral photo in social media


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->