60 வயதில் கேக் உண்ணும் போட்டியில் பாட்டி.. போட்டி ஆவலில் காலாவதியாகிப்போன சோகம்.!! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலிய நாட்டின் தேசிய தினவிழாவில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்ற வயதான பெண்மணி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

ஆஸ்திரேலிய நாட்டின் தேசிய தின விழாவை சிறப்பிக்கும் பொருட்டு, அங்குள்ள குயின்ஸ்லாந்து நகரில் பிரபலமான கேக் வகையை விரைவாக சாப்பிடும் போட்டியானது நடைபெற்றது. 

இந்த போட்டியில் கலந்து கொண்ட அனைவரும் கேக்கினை விரைவாக சாப்பிட்டுக்கொண்டு இருந்த நிலையில், போட்டியில் பங்கேற்ற 60 வயது பாட்டிக்கு திடீரென மூச்சுத்திணறல் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து பதறிப்போன போட்டியாளர்கள் செய்வதறியாது திகைக்கவே, அங்கிருந்த மருத்துவர் ஒருவர் பாட்டிக்கு முதலுதவி சிகிச்சையளித்த நிலையில், சிகிச்சை பலனின்றி பாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். 

பின்னர் இது தொடர்பாக காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, பாட்டியின் குடும்பத்தாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த விழாவினை நடத்திய உணவக நிர்வாகத்தின் சார்பாக இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Australia a 60 age lady join cake eating game and unfortunately died


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->