குழந்தைகள் சாப்பிடும் உணவில் 95 விழுக்காடு விஷம்..! வெளியான அதிர்ச்சி ஆய்வு முடிவுகள்.!! பெற்றோர்களே உஷார்..!! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் உள்ள தொண்டு நிறுவனங்கள்., ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் ஆகியோர் ஒன்றாக இணைந்து சிறந்த எதிர்காலம் என்ற பெயரில் எச்.பி.பி.எப் என்ற கூட்டமைப்பை நிர்வகித்து வருகின்றனர். இதன் மூலமாக கர்ப்பமாக இருக்கும் பெண்கள்., பிறந்த குழந்தையுடைய ஆரோக்கியம் மற்றும் பள்ளியில் பயின்று வரும் குழந்தைகளின் ஆரோக்கியம்., உடல் நலம் மற்றும் உணவுமுறை குறித்த ஆலோசனையை வழங்கி வருகிறது. 

இந்த நிலையில்., கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அமெரிக்காவில் இருக்கும் பல்வேறு கடைகளுக்கு சென்று சோதனை செய்ததில்., சுமார் 168 வகையிலான குழந்தைகள் உட்கொள்ளும் உணவுகளில் 95 விழுக்காடு அளவிலான நச்சுக்கள் கண்டறிபயப்பட்டுள்ளது. மேலும்., நான்கில் ஒரு உணவு பொருளில் கன உலோகம் என்று லழைக்கப்படும் ஆர்செனிக்., காரியம்., கேட்மியம் மற்றும் பாதரசம் போன்றவை இருப்பது தெரியவந்துள்ளது. 

இதனைப்போன்ற நச்சு மிகுந்த உலோகத்தை குழந்தைகள் சாப்பிட்டு வந்தால்., குழந்தைகளின் வளர்ச்சி வெகுவாக பாதிக்கப்பட்டு., குழந்தைகளின் ஆரோக்கிய மற்றும் அறிவுத்திறன் குறைந்து., புற்றுநோயை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும்., இவ்வாறாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பொருட்களாக பையில் இருக்கும் அரிசி சார்ந்த உணவு பொருட்கள்., ஆப்பிள் மற்றும் திராட்சை பழ சாறுகள் போன்றவை உள்ளது. 

இதுமட்டுமல்லாது ஓட்ஸ் வகையிலான தான்யம்., உளர் பாஸ்தா., சீஸ்., பப்ஸ் மற்றும் இரண்டு வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் உட்கொள்ளும் உணவுகள் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவைகளில் சுமார் 61 வகையான நிறுவன தயாரிப்பின் உணவுப்பொருட்களை அமெரிக்காவுடைய 14 நகரில் இருந்து பெறப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in american food have 95 percentage of poison


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->