சண்டே அலப்பறைகள்.! மது போதையில் இளைஞர் செய்த காரியத்தால்., தலைகீழாக பிடித்து துவைத்தெடுத்த நண்பர்கள்.!! - Seithipunal
Seithipunal


நெதர்லாந்து நாட்டில் இருக்கும் ரோட்டர்டாம் நகரில் இருக்கும் இளைஞர்கள் அவர்களது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு தொலைக்காட்சியில் நடைபெறும் நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டு இருந்தனர். 

அந்த சமயத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் மீனை விழுங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. அந்த நேரத்தில்., மது போதையில் இருந்த இளைஞர் ஒருவர் மீன்.. மீன் என்று கூறிக்கொண்டே கெளுத்தி மீன் ஒன்றை குவளையில் போட்டார். 

இதனை பார்க்காத மற்றொரு இளைஞர் வாயில் வைத்து மதுவை மடக் மடக் என்று குடிக்கவே., உயிருடன் இருந்த மீனை விழுங்கினார். மதுவை அருந்திய 10 நொடிகளில் மீன் செய்த சில்மிஷத்தில் வாயில் இருந்து வாந்தியை எடுக்க தொடங்கினார்.

தொண்டையில் விரலை விட்டு வாந்தி எடுத்ததும் பலனளிக்காமல்., வாந்தி வருமா? வராதா? என்று கண் கலங்கி இருந்த நிலையில்., இளைஞரின் நண்பர்கள் அவரை அலேக்காக தூக்கி., தலைகீழாக திருப்பி தொங்கவிட்டு துவைத்துள்ளனர்.   

உணவுகுடலில் இருந்த மீன் வெளியே வராமல் வெறும் இரத்த வாந்தியாக வந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த இளைஞர்கள்., உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து மருத்துவரிடம் நடந்ததை கூறி சிகிச்சைக்கு கூறியுள்ளனர். 

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் உடனடியாக தொண்டை வழியாக லாரிங்கோஸ்கோப் (laryngoscope) என்ற கருவியுடன் பரிசோதனை மேற்கொண்ட போது., மீனின் உருவம் தெரிந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக அந்த இளைஞருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு மீனை எடுத்துள்ளனர். 

இது குறித்து மருத்துவர் தெரிவித்ததாவது., எனது மருத்துவ வாழ்நாட்களில் சந்தித்த வித்தியாசமான நோயாளிகளில் இவரும் ஒருவராக இருக்கிறார். அவரது நண்பர்கள் மருத்துவமனைக்கு அழைத்து வந்த சமயத்தில் மேற்கொண்ட சோதனையின் போதே., மீன் உயிரிழந்திருந்தது. 

ஆனால் அந்த மீன் நுரையீரலுக்குள் இருந்தது. இதனையடுத்து அவருக்கு கவனமான முறையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு., மீனை எடுத்து அருங்காட்சியகத்தில் வழங்கினோம். இது போன்ற உயிரிழந்த மீன்கள் பல அருங்காட்சியத்தில் இருக்கிறது என்று தெரிவித்தார். 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

In america Sunday enjoyment will end doctor treatment when drink and eating live fish


கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
Seithipunal