அடித்து நொறுக்கிய சூறைக்காற்று.. சிதறி ஓடிய மாணவர்கள்..!! - Seithipunal
Seithipunal


அமெரிக்க நாட்டினை பொறுத்த வரையில் சூறாவளி காற்றுகள் அவ்வப்போது வீசி பெரும் சேதத்தை ஏற்படுத்தும். இது தொடர்பான பல வீடியோ காட்சிகளும், புகைப்படங்களும் வெளியாகி மக்களை பதறவைக்கும். 

இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள உள்விளையாட்டு அரங்கத்தின் கண்ணாடி மற்றும் கதவுகளை உடைத்தெறியும் புயல் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது. 

அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா மாநிலத்தில் இருக்கும் கிளிண்டன் நகரில் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் உள் விளையாட்டு அரங்கமும் உள்ளது. 

இந்த நிலையில், சம்பவத்தன்று அப்பகுதியில் புயல் காற்று சுமார் 136 கிமீ வேகத்தில் வீசியுள்ளது. இவ்வாறாக வீசிய புயல் காற்று அங்குள்ள உள் விளையாட்டு அரங்கினை தாக்கி கண்ணாடி மற்றும் கதவுகளை உடைத்து நொறுக்கியது. இந்த புயல் தாக்குதலில் இங்கிருந்த 3 மாணவர்கள் படுகாயமடைந்தனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in america storm attacks indoor stadium


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->