200 ஊழியர்களுக்கு ரூ.70 கோடி போனஸ் அறிவித்த தனியார் நிறுவனம்..! திகைத்துப்போன ஊழியர்கள்.!! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் போனசாக இந்திய மதிப்பில் ரூ.70 கோடி போனஸ் அளித்து ஊழியர்களை கொண்டாட்ட கடலில் திளைக்க வைத்துள்ளது. 

அமெரிக்காவில் உள்ள மேரிலாண்ட் பகுதியில் செயல்பட்டு வரும் செயின்ட் ஜான் ப்ராபர்ட்டிஸ் நிறுவனம்., தனது ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்து ஏற்பாடு செய்துள்ளது. 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுமார் 200 ஊழியர்களுக்கு சிவப்பு நிறுத்தினால் ஆன உரைகள் வழங்கப்பட்டது. பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய இந்நிறுவனத்தின் தலைவர் எட்வார்ட் செயின்ட் நான் அறிவித்த பின்னர் உரைகளை ஊழியர்கள் பிரித்து பார்த்தனர். 

america company bonus workers,

இந்த சமயத்தில்., உரைகளுக்குள் பணம் கட்டுக்கட்டாக இருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். அவரவரின் பதவி மற்றும் பணியாற்றிய வருடத்தை பொறுத்து போனஸ் தொகையானது குறைந்தபட்சமாக 100 டாலர் முதல் அதிகபட்சமாக 2,70,000 டாலர் வரை வழங்கப்பட்டது. 

இதன் மூலமாக தங்களின் கடன் மற்றும் குழந்தைகளின் கல்வி செலவை பார்த்துக்கொள்ளுமாறு செயின்ட் ஜான் தெரிவித்தார். இதனை மகிழ்ச்சியாக ஊழியர்கள் அனைவரும் ஏற்று கொண்டனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in america riyal estate company announce 70 crore inr bonus for workers


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->