நடுவானில் எதிர்பாராத விதமாக மோதிய விமானங்கள்.! பரிதாபமாக பலியான உயிர்கள்., நடுக்கடலில் உயிருக்கு போராடிய மக்கள்.!!  - Seithipunal
Seithipunal


கனட நாட்டில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் இருக்கும் வான்கூவர் நகரில் இருக்கும் பகுதியில் இருந்து., அமெரிக்க நாட்டின் அலெஸ்கா மாகாணத்திற்கு "ராயல் பிரின்சஸ்" என்னும் சொகுசு கப்பலின் மூலமாக சுற்றுலா பயணம் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் படி சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகளை ஏற்றுக்கொண்ட ராயல் பிரின்சஸ் சொகுசு கப்பலானது வான்கூவருக்கு சனிக்கிழமை புறப்பட்டு சென்றது. 

இந்த நிலையில்., நேற்று முன்தினமன்று அங்குள்ள சுற்றுலா தலமான கேட்டசிகன் நகருக்கு சென்றடைந்ததை அடுத்து., அங்கு சுற்றுலா பயணிகள் சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில்., இந்த கேட்டசிகன் கடற்கரை நகரமானது சிறிய ரக விமானங்களின் தரையிறக்கத்திற்கு பிரபலனானதாகும். 

இந்த சிறிய ரக விமானங்கள் கடலில் தரையிறங்குவதற்கும்., தரையில் தரையிறங்குவதற்கும் பிரத்தியேக அமைப்பை கண்டது. இந்த விமானங்கள் மூலமாக அங்குள்ள சுற்றுலா தளத்திற்கு பயணிகளை அழைத்து செல்ல முடிவு செய்து., விமானங்கள் மூலமாக சுற்றுலா பயணிகள் அழைத்து செல்லப்பட்டனர். ஒரு விமானத்தில் சுமார் 11 பயணிகளும்., மற்றொரு விமானத்தில் சுமார் 5 பயணிகளும் செல்லப்பட்ட நிலையில்., மீண்டும் கேட்டசிகன் நகருக்கும் திரும்பினர்.

இந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக இரண்டு விமானங்கள் நடுவானிலேயே மோதிக்கொண்டது. நொடிப்பொழுதில் நடைபெற்ற இந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும்., 10 பேர் பலத்த காயமடைந்தனர். இதுமட்டுமல்லாது ஒருவரை காணவில்லை. இந்த விபத்து குறித்த தகவலை அறிந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

English Summary

in america mid air two seaplane was crashed 4 peoples died and 2 members missing


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal