சாதா நாய்க்கு பிறந்த ஹல்க் நாய்க்குட்டி... ஆச்சரியத்தில் உரிமையாளர் செய்த காரியம்.!! - Seithipunal
Seithipunal


அமெரிக்க நாட்டில் உள்ள வடக்கு கரோலினா மாநிலத்தில் இருக்கும் ஹேவுட் கவுன்டி பகுதியை சார்ந்தவர் ஷானா ஸ்டெமி. இவர் தனது இல்லத்தில் ஜிப்ஸி என்று பெயர் வைத்திருக்கும், ஜெர்மன் ஷெப்பர்டு வகை நாயை வளர்த்து வந்துள்ளார். 

இந்த நாய் நேற்று அதிகாலை சுமார் 8 குட்டிகளை ஈன்றுள்ளது. இந்த எட்டு குட்டிகளில் நான்காவதாக பிறந்த ஆண் குட்டி ஒன்று பச்சை நிறத்தில் இருந்துள்ளது. இதனை கண்டு பெரும் அதிர்ச்க்கும், ஆச்சரியத்திற்கும் உரிமையாளர் உள்ளாகியிருந்தார். 

இது தொடர்பாக புகைப்படம் எடுத்து இதனை இணையதளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகும் நிலையில், இந்த விஷயம் தொடர்பாக விலங்கின ஆய்வாளர்கள் கூறுகையில், 

இந்த பச்சை நிற குட்டிக்கு சாதாரண விளக்கங்கள் தரமுடியும். எடுத்துக்காட்டாக நாய்க்குட்டி வயிற்றுக்குள் இருக்கும் போது தாயின் கர்ப்பப்பையில் கசிந்த திரவம் காரணமாக குட்டியின் நிறம் மாறியிருக்கலாம் என்றும், வேறு ஏதும் கதிர்வீச்சு பிரச்சனை இல்லை என்றும் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து இந்த குட்டி, திரைப்படத்தில் வரும் ஹல்க் கதாபாத்திரம் போன்று பச்சை நிறத்தில் இருப்பதால், இந்த குட்டிக்கு ஹல்க் என்ற பெயர் வைத்து உள்ளதாகவும் ஷானா ஸ்டெமி தெரிவித்துள்ளார்.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in america hulk dog


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->