குடும்ப விசா சிக்னலுக்கு தவியாய் தவித்து காத்திருக்கும் இந்தியர்கள்.. வெளியான தகவல்..!! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா நாட்டில் நிரந்தரமாக தங்கியிருந்து பணியாற்ற விரும்பும் பிற நாட்டு மக்களுக்கு க்ரீன் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. மேலும்., மூன்று வருடம் மட்டும் தங்கியிருந்து பணியாற்ற விரும்பும் நபருக்கு "எச்-1 பி" விசாவானது தரப்படுகிறது. இந்த விசாவினை மேலும் மூன்று வருடங்கள் வேண்டும் என்றால் நீட்டிப்பு செய்து கொள்ளலாம். 

எச்-1 பி விசா பெற்றுள்ள நபர்களில் திறமை மற்றும் தகுதியுடைய 7 விழுக்காடு அளவிலான நபர்களுக்கு நிரந்தர க்ரீன் கார்டுகள் வழங்கப்படுகிறது. மேலும்., க்ரீன் கார்டுகளை பொறுத்த வரையில் விண்ணப்ப மூப்பின் அடிப்படையிலும் வழங்கப்படுவதனால்., க்ரீன் கார்டிற்கான அனுமதியை பெற வருடக்கணக்கில் காத்துகொண்டு இருக்கின்றனர்.

தற்போது அமெரிக்காவில் குடும்பத்தினர் அடிப்படையில் கிடைக்கும் கிரீன் கார்டிற்காக சுமார் 2 இலட்சத்து 27 ஆயிரம் இந்தியர் காத்துகொண்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 40 இலட்சம் மக்கள் குடும்பத்தாரின் மூலமாக கிடைக்கும் கிரீன் கார்டிற்க்காக காத்திருக்கும் நிலையில்., இவர்களில் பெரும்பாலானோராக 15 இலட்சம் மக்கள் மெக்சிகோவை சார்ந்தவர்கள் ஆவார்கள்.

இவர்களுக்கு அடுத்தபடியாக சுமார் 2 இலட்சத்து 27 ஆயிரம் பேர் இந்தியர்கள் என்றும்., 1 இலட்சத்து 80 ஆயிரம் பேர் சீனர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா நாட்டில் தற்போது உள்ள விதிகளின் படி உறவுகளின் அடிப்படையில் சில வெளிநாட்டவருக்கு க்ரீன் கார்டு வழங்கபடுகிறது. இந்த நேரத்தில் அமெரிக்காவில் இந்தியர்களில் பெரும்பாலோனோர் அமெரிக்க குடிமகன்களின் உடன்பிறப்புகளாக இருந்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in america h1b visa Indians waiting


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->