அமெரிக்காவில் போராட்ட எதிரொலி.! பருவநிலை மாற்றத்திற்கான போராட்டத்தில்., 16 வயது சிறுமியின் அடுத்த அதிரடி முடிவு.!!  - Seithipunal
Seithipunal


உலகத்தின் பருவநிலை மாற்றத்தினை தடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க கூறி., உலகம் முழுவத்திலும் தொடர் போராட்டமானது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்., கடந்த திங்கள் கிழமையன்று அமெரிக்க நாட்டில் உள்ள ஜெனிவாவில் ஐக்கிய நாடுகளின் சபையில்., பருவநிலை மற்றம் குறித்த மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் பங்கேற்றுக்கொண்ட சுவீடன் நாட்டினை சார்ந்த கிரேட்டா தன்பெர்க் என்ற பருவநிலை மாற்ற ஆர்வலரான பதினாறு வயதுடைய சிறுமி., இப்போதுள்ள பருவநிலை மாற்றத்தினால் பேரழிவை நாம் சந்திக்க இருக்கிறோம் என்று கூறி., உலகளாவிய தலைவர்களை கடுமையாக விமர்சிக்கவும் செய்திருந்தார். 

பருவநிலை மாற்றம், பருவநிலை, global warming,

இந்த தருணத்தில்., இவர் கூறியது உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில்., இவரது பேச்சின் வேகம் காரணமாக பருவநிலை மாற்றம் தொடர்பான இரண்டாம் கட்ட போராட்டங்களும் தொடர்ந்து அதிகரித்து நடைபெற்று கொண்டு வருகிறது. இந்த இரண்டாம் கட்ட போராட்டத்தின் படி., நியூசிலாந்து நாட்டிலும் போராட்டம் துவங்கியுள்ளது. 

நியூசிலாந்து நாட்டில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று சேர்ந்து., அங்குள்ள பாராளுமன்றத்தை நோக்கிய அணிவகுப்பு போராட்டத்தை நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில்., இன்று போராட்டமும் நடைபெற்றது. நியூசிலாந்து நாட்டின் வரலாற்றில் இல்லாத அளவிற்கு மக்கள் படையுடன் இந்த போராட்டம் நடைபெற்றதை கேட்டு இன்ப அதிர்ச்சிக்கு கிரேட்டா தன்பெர்க் உள்ளாகியுள்ளார். இதனையடுத்து தனது போராட்டத்தை நியூசிலாந்தில் நடத்தவும் முடிவு செய்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in america global warming strike continue in new Zealand


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->