பள்ளி காதலில் காதலன் கொடுத்த மோதிரம்.. 47 வருடங்களுக்கு பின்னர் நடந்த அதிசய மாற்றம்..!! - Seithipunal
Seithipunal


அமெரிக்க நாட்டில் உள்ள போர்ட்லாந்து நகரினை சார்ந்த பெண்மணி டெப்ரா மெகன்னா (வயது 63). இவர் கடந்த 1973 ஆம் வருடத்தில் பள்ளிப்பருவத்தில், தனது காதலர் பரிசளித்திருந்த மோதிரத்தை தொலைத்துள்ளார். 

இந்த மோதிரத்தை எங்கு தேடியும் காணவில்லை என்பதால், காதலனின் பரிசை தொலைத்த ஏக்கத்திலேயே இருந்து வந்துள்ளார். இந்த நேரத்தில், இவருக்கு பார்சல் ஒன்று வந்துள்ளது. 

இந்த பார்சலில், சுமார் 47 வருடங்களுக்கு முன்னதாக மாயமான மோதிரம் உள்ளே இருப்பதை கண்டு பெரும் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். மேலும், இந்த மோதிரம் பின்லாந்து நாட்டில் இருக்கும் காட்டில் கிடைத்ததாக அவருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. 

பின்லாந்து நாட்டில் உள்ள உலோக ஆய்வ பணியாளருக்கு, மண்ணிற்கு அடியில் இருந்து மோதிரம் எடுக்கப்பட்டுள்ளதாக தஹிரிவிக்கப்ட்டுள்ளது. மேலும், மோதிரத்தில் டெப்ரோவின் பள்ளியின் பெயர் இருந்துள்ளதால், இதனை அவரது முகவரிக்கு அனுப்பி வைத்தது தெரியவந்துள்ளது. 

இதுமட்டுமல்லாது இவரது காதல் கணவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னதாக உயிரிழந்துவிட்ட நிலையில், 47 வருடங்களுக்கு பின்னர் காதல் கணவர் கொடுத்த மோதிரம் மீண்டும் வந்த ஆனந்தம் தனக்கு எல்லையில்லாத ஆனந்தத்தை தருவதாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in america girl love gift retrieve after 47 years


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->