ஒரு வருடத்திற்கு முன்னர் காணாமல் போன மகள் ஆபாச இணையத்தில்...! கதறிய தாயார்... விசாரணையில் பகீர்.!! - Seithipunal
Seithipunal


அமெரிக்க நாட்டில் உள்ள புளோரிடா மாகாணத்தை சார்ந்த 15 வயதுடைய சிறுமியொருவர் கடந்த வருடத்தின் முன் மாயமான நிலையில்., இந்த பெண்ணின் தாயார் பல இடங்களில் சிறுமியை தேடியும் கண்டறிய இயலாததால்., அதிர்ச்சியடைந்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 

மேலும்., இவரின் உறவினர்களிடம் மகள் குறித்து கேட்டறிந்த நிலையில்., மகளை தேடும் பணியில் தாயாரே இறங்கினார். இந்த தருணத்தில்., இவரது மகள் அரை நிர்வாண கோலத்துடன்., ஆண் நபரொருவருடன் உல்லாசமாக இருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி., இவர் தனது மகள் தான் என்பதை உறுதி செய்துள்ளார். 

இதனையடுத்து இது குறித்த தகவலை காவல் துறையினருக்கு தெரியப்படுத்தவே., இதனை ஏற்ற காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் குறித்த ஆபாச இணையத்தில் இருந்து சுமார் 60 க்கும் மேற்பட்ட ஆபாச விடியோக்களை கைப்பற்றிய நிலையில்., பெண்ணின் தற்போதையை நிலை குறித்து விசாரணை மேற்கொண்டனர். 

இது குறித்த ஆபாச வீடியோ காட்சிகளில் பதிவாகியிருந்த காரின் என்னை கண்டறிந்து மேற்கொண்ட விசாரணையில்., கிறிஸ்டோபர் ஜான்சன் (வயது 30) என்ற காம கொடூரனை கைது செய்து விசனரை மேற்கொண்டனர். அந்த விசாரணையில்., சிறுமியை அன்பால் வீழ்த்தி., ஆசையை வளர்த்து பாலியல் வன்கொடுமை செய்ததும்., சிறுமியை பலருக்கு விருந்தாக்கியதும் தெரியவந்தது.

மேலும்., 30 வயதாகும் இந்த கொடூரன் வயது குறைந்த மற்றும் சிறுமிகளை தேர்ந்தெடுத்து பாலியல் வன்கொடுமை செய்து., மூளைச் சலவை செய்து தன்னுடன் வைத்து கொள்வான் என்றும்., இளம்பெண்களை சீரழித்து வீடியோ எடுத்து இணையத்தில் பரப்பும் கும்பலை சார்ந்தவன் என்பதும் தெரியவந்துள்ளது. இது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in america girl kidnapped sexual harassment illegal video


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->