விமானத்தில் இருந்து கீழே கொட்டிய எரிபொருள்.. 20 குழந்தைகள் உட்பட 50 பேர் மருத்துவமனையில் அனுமதி.!! - Seithipunal
Seithipunal


விமானத்தில் இருந்து கீழே கொட்டிய எரிபொருள்.. 20 குழந்தைகள் உட்பட 50 பேர் மருத்துவமனையில் அனுமதி.!!அமெரிக்க நாட்டில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சீன நாட்டில் உள்ள ஹாங்காய் நகருக்கு டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்று நேற்று புறப்பட்டது. 

இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திற்கு உள்ளாகவே, விமானத்தில் இருந்தே ஜெட் எரிபொருள் கீழே கொட்டியுள்ளது. இந்த எரிபொருள் அப்பகுதியில் இருந்த 3 பள்ளிகள் மற்றும் சில பகுதிகளில் விழுந்து சிதறியது. 

விமானத்தில் எரிபொருள் அப்பகுதியில் இருந்த குழந்தைகளின் மீது விழவே, தோல் அரிப்பு பிரச்சனையின் காரணமாக அவதியுற்றுள்ளனர். இதனையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் பாதிக்கப்பட்ட குழந்தைகளை அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர். 

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும் பார்க் அவெனியூ பகுதியில் இருக்கும் துவக்கப்பள்ளியில் சுமார் 20 குழந்தைகள் மற்றும் 11 பெரியவர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மொத்தமாக சுமார் 60 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரலாம் என்று செய்திகள் வெளியாகிறது. 

இந்த விஷயம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தவே, விமானம் புறப்பட்ட சில நிமிடத்திற்கு உள்ளாகவே ஏற்பட்ட இயந்திர கோளாறால், விமானத்தின் எடையை குறைக்க அவசரமாக எரிபொருள் வெளியேற்றம் செய்யப்பட்டு, விமானம் மீண்டும் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்திற்கே திரும்பியதாக டெல்டா ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in america flight fuel dropped publicly due to emergency landing


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->