கரோனா பீதியால் சிறை போராட்டம் வன்முறையாக மாற்றம்... 23 கைதிகள் சுட்டு கொலை.!! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் உள்ள கொலம்பியாவில் கரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில், 231 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தடுக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், இங்குள்ள சிறையில் அதிகளவு கூட்டம் மற்றும் சுகாதார சேவைகள் மோசம் போன்ற காரணத்தால் கரோனா பரவும் அச்சம் இருக்கிறது. இதனால் அங்குள்ள 132 சிறைகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இது பதற்றமான சூழலையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அங்குள்ள பொகோடாவில் இருக்கும் நாட்டின் மிகப்பெரிய சிறையில் ஏற்பட்ட போராட்டம் கலவரமாக வெடித்த நிலையில், சிறையை விட்டு கைதிகள் தப்பி செல்ல முயற்சி செய்துள்ளனர். இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

சிறையில் காவல் அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ள நிலையில், பயங்கர மோதல் மற்றும் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இதில் கைதிகள் 23 பேர் கொள்ளாத்தனர். மேலும், 83 பேர் குண்டடி காயத்துடன் மீட்கப்பட்டனர். இதனைப்போன்று காவல் துறையினர் தரப்பிலும் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பலரது நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in America Colombia prison violence 23 culprits killed by police


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->