வெடிவிபத்து நடந்த இடிபாடுகளில் கிடந்த இளம்பெண்ணின் உடல்.! இறுதியில் காத்திருந்த பேரதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் உள்ள வட கரோலினாவில் செவ்வாய்க்கிழமை ஒரு பெரிய வீடு வெடித்ததில் எஞ்சியிருந்த குப்பைகளுக்கு அடியில் ஒரு சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த ஒருவரையும் தீயணைப்பு வீரர்கள் கண்டுபிடித்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கலரோலினா நகரில் உள்ள சார்லோட்டுக்கு தெற்கே உள்ள செல்வந்த புறநகரான பாலான்டைனில் எதிர்பாராத வெடி விபத்தானது நிகழ்ந்தது, மரக்குவியல்களுடன் இருந்த பகுதியில் நடந்த வெடிவிபத்தில் அதிஷ்டவசமாக தப்பிய மக்களை காப்பாற்றிய பாதுகாப்பபு படையினர்., சுமார் 80 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

Tamil online news Today News in Tamil

இந்த வெடிவிபத்தின் போது அங்குள்ள தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் வரையிலும் இதன் தாக்கத்தை மக்கள் உணர்ந்ததாக கூறியுள்ளனர். இது குறித்து அந்த பகுதி மக்கள் தெரிவித்தாவது., நான் அங்குள்ள கடைக்கு செல்வதற்காக வெளியே சென்றேன், நான் அங்குள்ள வீட்டின் அருகே நடந்தேன். சுமார் இரண்டு நிமிடங்கள் கடந்த பின்னர் ஒரு விதமான அதிர்வை உணர்தேன் பின்னர் வெடி சத்தத்தை கேட்டேன், 

அங்கிருக்கும் மக்கள் அனைவரும் பதறியபடி தங்கள் வீடுகளை விட்டு வெளியேறத் தொடங்கினர். நான் நடந்து சென்ற இடத்திலேயே அந்த வெடிவிபத்து நடந்துள்ளது. மேலும்., எனது வீடு முற்றியுலும் சேதமடைந்து தரைமட்டமாக்க கிடந்தது என்று தெரிவித்தார். மேலும்., இந்த காட்சிகளை கண்டு பதறிப்போன மக்கள் உடனடியாக காவல் துரையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 


இந்த இடத்தில் ஏற்பட்ட தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்த காவல் துறையினர்., கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி இறந்த பெண்ணன் உடலை மீட்டனர். மேலும்., அருகில் இருந்த வீடுகளில் காயமடைந்து இருந்த இரண்டு பேரை மீட்ட தீயணைப்பு படையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுமட்டுமல்லாது இது தொடர்பான காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.  

Tamil online news

Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in america a explosion in houses heavily one girl died


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->