ஒரே சமயத்தில் கருத்தரித்த 9 நர்ஸ்களுக்கு பிறந்த குழந்தைகள்..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!! - Seithipunal
Seithipunal


நாம் வாழ்ந்து வரும் உலகை சுற்றி பல்வேறு விதமான வித்தியாசமான நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில்., நடக்கும் பல சுவாரசியமான சம்பவங்களில் பல ஆச்சரியமூட்டும் வகையில் அமைவது வழக்கம். அதே போன்று அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் பணிபுரியும் நர்ஸுகள் 9 பேர் ஒரே நேரத்தில் கருத்தரித்துள்ள ஆச்சரியம் நடந்தது. 

அமெரிக்க நாட்டில் இருக்கும் போர்லாண்ட் பகுதியில் உள்ள மருத்துவமனையில் 9 செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமான நிலையில்., அனைவரும் தங்களின் கணவருடன் வசித்து கொண்டு வருகின்றனர். 

9 nurse pregnancy, 9 நர்ஸ்கள் கர்ப்பிணியான மருத்துவமனை,

இவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் கர்ப்பமாக இருக்கும் நிகழ்ச்சியானது நடந்து பலரை ஆச்சரியத்தில் மூழ்ங்க வைத்தது. இவர்கள் அனைவரும் ஒன்றாக பிறக்காத சகோதர சகோதரிகள் என்ற குறைமட்டும்தான். 

பணி நேரத்திலும் சரி பிற நேரத்திலும் சரி அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கும் நல்ல நண்பர்கள் மற்றும் தோழர்கள் என்று தான் கூற வேண்டும்., இவர்களில் முதலில் ஒரு பெண் கருவுற்றதை தொடர்ந்து அடுத்தடுத்து அனைவரும் கருத்தரித்துள்ளனர் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.. 

9 nurse pregnancy, 9 நர்ஸ்கள் கர்ப்பிணியான மருத்துவமனை,  9 நர்ஸ்கள் குழந்தைகளுடன்,

இவர்கள் அனைவருக்கும் அடுத்தடுத்து ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரை தொடர்ச்சியாக குழந்தைகள் பிறக்கும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார். இவர்கள் அடுத்தடுத்து விடுமுறையில் செல்ல இருப்பதால்., செவிலியர்கள் பணிக்கு தற்போது ஆட்கள் தேவைப்படுகிறது என்றும் தெரிவித்து இருந்தது.. 

இவர்களின் புகைப்படத்துடன் தனது வேலைக்கான காலி பணியிடங்கள் குறித்து கூறியுள்ளது. இவர்களின் பிரசவத்திற்கான சிகிச்சையை மருத்துவமனையிலேயே பெறவும் மருத்துவமனை விருப்பம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில்., இவர்கள் அனைவருக்கும் பிரசவமாகி குழந்தைகளுடன் இருக்கும் புகைப்பட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in america 9 nurse pregnant and delivery baby same day


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->