தோழியை பத்திரமாக வீட்டிற்கு கொண்டு சென்று விட்டு வந்த சிறுவனுக்கு., காதலனால் நேர்ந்த பெரும் சோகம்.!!  - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் உள்ள பகுதியில் வசித்து வரும் சிறுவனின் பெயர் கசீன் மோரிஸ் (வயது 16). இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இரவு உணவகத்திற்கு சென்று வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்த தருணத்தில்., இவருடன் பள்ளியில் பயின்று வரும் சிறுமியொருவர் சாலையில் தனியாக நடந்து வந்து கொண்டு இருந்துள்ளார். 

இவரை பார்த்த சிறுவன்., சிறுமியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு., சிறுமியின் இல்லத்தில் கொண்டு விட்டுவிட்டு வந்துள்ளார். இந்த விஷயத்தை சிறுமி தனது காதலரிடம் கூறி மகிழ்ச்சியடைந்துள்ள நிலையில்., சிறுமி தனது காதலரிடம் விளையாட்டாக பொறாமையை தூண்டும் வகையில் கூறியுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் காதலர்., தனது நண்பர்களுடன் சேர்ந்து., திங்கட்கிழமை பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிய சமயத்தில்., சிறுமிக்கு உதவி செய்த கசீனை சுற்றிவளைத்து பீட்சா உணவகத்திற்கு முன்னாள் வைத்து தாக்கியுள்ளனர். 

கொலை, குற்றம், தற்கொலை, killed, murder, suicide attempt,

இதனையடுத்து தான் கொண்டு வைத்திருந்த கத்தியை வைத்து., சிறுவனின் நெஞ்சில் குத்தியதை அடுத்து., சிறுவன் உயிருக்கு போராடி துடித்துள்ளான். இந்த காட்சிகளை சுமார் 80 மாணவர்கள் வீடியோ மட்டும் பதிவு செய்து கொண்டு., சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். மேலும்., இந்த சண்டையினை தடுக்கவும்., சிறுவனை காப்பாற்றவும் யாருமே வரவில்லை. 

இந்த கொடூர கொலை வெறித்தாக்குதலில் சிறுவன் கசீன் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்துள்ளான். மேலும்., கசீன் மிகுந்த அமைதியான சுபாவம் கொண்ட சிறுவனாக அனைவராலும் கூறப்பட்ட நிலையில்., இந்த கொலையை தடுக்க மற்றும் சிறுவனை பாதுகாக்க முன்வரவில்லை என்பது வருத்தமான ஒன்றாகும். மேலும்., கஸீனின் குடும்பம் ஏழ்மையான குடும்பம் என்பதால்., அவரின் இறுதி சடங்கை செய்ய சமூக ஆர்வலர்கள் நிதி திரட்டி வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in america 16 year old boy killed due to love possessiveness


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->