வாழ்வாதாரத்திற்க்காக கடற்பயணம்.. இலக்கு கண்ணில் எட்டும் தூரத்தில் அரங்கேறிய சோகம்.. 58 பேர் பரிதாப பலி.!! - Seithipunal
Seithipunal


பொருளாதார பிரச்சனை மற்றும் உள்நாட்டு போர் போன்ற பல பிரச்சனைகளால் சீர்குலைந்து ஆப்ரிக்க நாடு உள்ள நிலையில்., ஆப்பிரிக்க நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக வாழ்வாதாரம் தேடி செல்கின்றனர். 

இவ்வாறாக வாழ்வாதாரத்திற்க்காக செல்லும் மக்கள் அனைவரும் கடல் மார்க்கமாக சட்டவிரோத மற்றும் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் நிலையில்., ஆபத்தான பயணம் விபத்தில் முடிந்து பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது. 

மேற்காபிரிக்க நாட்டில் இருக்கும் காம்பியா நாட்டில் iஇருந்து கடந்த மாதத்தின் இறுதியில் போது 150 அகதிகளை ஏற்றுக்கொண்ட ஸ்பெயின் கப்பலானது புறப்பட்டு சென்றுள்ளது. இந்த கப்பல் இடைவிடாத பயணத்திற்கு பின்னர் மவுரித்தானியா நகருக்கு அருகே சென்று கொண்டு இருந்துள்ளது.

died, murder, killed,

இந்த நேரத்தில் படகு எதிர்பாராத விதமாக கவிழ்ந்ததை அடுத்து., கப்பலில் இருந்த அனைவரும் பரிதாபமாக நீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர். பின்னர் இது தொடர்பாக கடலோர காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த கடலோர காவல் படையினர் மீட்பு பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில்., 58 பேர் இவ்விபத்தில் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும்., 74 பேரை பத்திரமாக மீட்டுள்ளனர். மாயமான 18 பேரை தேடும் பணியானது நடைபெற்று வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in African Refugees died during European travel


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->