சனிப்பிணம் துணைக்கு ஆறு பேரை அழைத்து சென்ற சோகம்.! பரிதாபமாக பலியான உறவினர்கள்.!! - Seithipunal
Seithipunal


ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள கிழக்கு பகுதியில் உகாண்டா நாடானது அமைந்துள்ளது. இந்த நாட்டில் செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை மழையானது பெய்யும் காலமாகும். இந்த நிலையில்., தற்போது உகாண்டாவில் மிதமான மழையானது பெய்து வருகிறது. 

உகாண்டா நாட்டில் உள்ள வடக்கு பகுதியில் அமைந்துள்ள பதேர் மாவட்டத்தில் உள்ள டோபி கிராமத்தில் வசித்து வந்த நபர் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்துள்ளார். இவருக்கான இறுதி சடங்கானது நேற்று இரவில் நடைபெற்றுள்ளது. 

இந்த இறுதி சடங்கிற்கு சுமார் 20 க்கும் மேற்பட்ட உறவினர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்து கொண்டிருந்த சமயத்தில்., திடீரென மழையானது பெய்துள்ளது. மழை பெய்ததை அடுத்து அங்குள்ள மரத்திற்கு கீழே ஒதுங்கியுள்ளனர். 

thunder,

இந்த நேரத்தில் திடீரென மழையானது இடி மின்னலுடன் தொடர்ந்து அதிகரிக்கவே., மக்கள் ஒதுங்கியிருந்த மரத்தின் மீது மின்னலானது தாக்கியுள்ளது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில்., 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

பின்னர் இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்., உறவினரின் இறுதி சடங்கிற்கு சென்று அனைவரும் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

In Africa ukanda peoples died


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->