இந்து மதத்தை தழுவும் ஆப்ரிக்க மக்கள்... கொண்டாட்டமும், கோலாகளமுமாக மாறும் கானா.!! - Seithipunal
Seithipunal


உலகளவில் இந்து சமய மக்கள் அதிகளவு வாழும் நாடாக நேபாளம், இந்தியா, மொரிசியஸ் போன்ற நடுகல் இருக்கிறது. இந்நாடுகளில் இந்து சமூக, சமயம் தொடர்புடைய வழிபாட்டுத்தலம் போன்றவை அதிகளவு இருக்கும். இந்து மக்கள் அதிகளவு வாழும் நாடுகளிலும் கோவில்கள் இருக்கும். உலகம் முழுவதும் சுமார் 100 கோடி இந்து மக்கள் வசித்து வருகின்றனர்.

ஆப்ரிக்காவின் கானா நாட்டில் உள்ள அக்ரா கடற்கரை நகரில் இந்து மக்கள் வசித்து வருகின்றனர். பொதுவாக வெளிநாட்டில் இந்துக்கள் அதிகளவு வாழும் பகுதியில், இந்து ஆலயம் இருக்கும் நிலையில், கானா நாட்டில் இந்த கோவில் ஈர்ப்பும் ஆச்சரியம் ஆகும். இக்கோவிலில் இருக்கும் மற்றும் இந்த நகரில் வசித்து வரும் இந்துக்கள் இந்தியர்கள் இல்லை. அவர்களுக்கு இந்திய மொழியும் தெரியாது. 

கானா நாட்டின் மொத்த மக்கள் தொகையாக 2.3 கோடி இருக்கும் நிலையில், 60 விழுக்காடு கிருத்துவர்கள், 15 விழுக்காடு முஸ்லீம்கள் மற்றும் 25 விழுக்காடு ஆபிரிக்க பழங்குடியின வம்சாவளியினர் ஆகும். ஆங்கிலேய ஆதிக்க சமயத்தில், கிறிஸ்துவத்திற்கு மதம் மாறிய நாடுகளில் கானாவும் விதிவிலக்கல்ல. கடந்த 1937 ஆம் வருடத்தில் பிறந்த கேவிஸி, 1962 ஆம் வருடத்தில் ரிஷிகேஷ் சிவானந்த ஆசிரமத்திற்கு தொடர்பு கொண்டுள்ளார். 

பின்னர் இது வழி பிரார்த்தனை சங்கத்தை ஆப்பிரிக்காவில் ஏற்படுத்திய நிலையில், கடந்த 1970 ஆம் வருடத்தில் ரிஷிகேஷ் சிவானந்தர் ஆசிரத்திற்கு வந்துள்ளார். பின்னர் இந்துமத சொற்பொழிவுகளை கண்டு, 1975 ஆம் வருடத்தில் கிருஷ்ணாநந்த ஸரஸ்வதியால் கானானந்த ஸரஸ்வதி என்று பெயரிட்டு ஆப்ரிக்காவிற்கு திரும்பி பணியை துவங்கியுள்ளார். ஆசிரமத்தை துவங்கி அங்கேயே இருந்த நிலையில், கானா நாட்டில் 12 ஆயிரத்து 500 இந்துக்கள் உள்ளனர். இதில் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஆப்பிரிக்க வம்சாவளி நபர்கள் ஆவார்கள். 

பல மதத்தினரும் இந்துவுக்கு மாறியுள்ள நிலையில், இது குறித்து அவர் தெரிவித்த சமயத்தில், யாரையும் இந்துவாக மாற்ற இயலாது. இந்து என்பது பிற மதத்தை போல மதம் இல்லை.. அது வாழ்கை முறை. இந்துவாக மாற விரும்பும் நபர்களுக்கு தேவையான உதவிகளை செய்கிறோம். பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. உள்ளூர் மொழியில் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் எங்களுக்கு இந்தியாவில் உள்ள இந்து அமைப்புகளிடம் இருந்து சரிவர உதவிகள் வருவதில்லை.. நாங்களாகவே இந்து மதத்தை தழுவி, இந்து முறைப்படி வாழ்ந்து வருகிறோம் என்று கூறினார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Africa Hindu peoples


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->