ஆப்கானிஸ்தானில் சரணடைந்த தீவிரவாதிகள்.. இந்தியர்களும் சரணடைந்துள்ளதால் தீவிர விசாரணையில் அதிகாரிகள்.!! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தான் நாட்டில் செயல்பட்டு வரும் தலிபான் அமைப்பானது கடந்த சில வருடங்களாகவே தனது ஆதிக்கத்தை தொடர்ந்து செலுத்தி வருகின்றனர். அப்பாவி பொதுமக்கள் மீது தொடர்ந்து குறிவைத்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தாக்குதல் சம்பவங்களை கட்டுக்குள் வைக்கவும்., பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தை குறைக்கவும்., ஆப்கானிஸ்தான் நாட்டின் அரசுப்படைகள் மற்றும் அமெரிக்காவின் தலைமையிலான இராணுவ கூட்டுப்படைகளை சேர்ந்து., வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை அவ்வப்போது மேற்கொண்டு வருகின்றனர். 

இதன் காரணமாக பயங்கரவாத இயக்கத்தினருக்கும் - இராணுவ படைக்கும் அவ்வப்போது கடுமையான மோதல் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. சில சமயத்தில் இராணுவ நிலைகளின் மீது தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்., அவ்வப்போது ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர் மொத்தமாக இராணுவத்தினர் வசம் சரணடைவதும் நிகழ்ந்து கொண்டு உள்ளது. 

Afghan army,

இந்த நிலையில்., தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிர நடவடிக்கையின் காரணமாக கடந்த 12 ஆம் தேதியன்று 13 பாகிஸ்தானியர்கள் உட்பட 93 பேர் இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். இதனைப்போன்று மொத்தமாக கடந்த இரண்டு வாரங்களில் சுமார் 900 பேர் சரணடைந்துள்ளதாகவும், இவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தானியர்கள் என்பதும்., இவர்கள் தங்களின் குடும்பத்தாருடன் சரணடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்., இந்தியாவை சொந்த நாடாக கொண்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் 10 பேர் சரணடைந்துள்ளதாகவும்., இவர்களில் பெரும்பாலானோர் கேரள மாநிலத்தை சொந்தமாக கொண்டவர்கள் என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Afghanistan terrorist safe zone investigation going on


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->