வன்முறைக்கு மத்தியில் தேர்தல்.! 132 இடங்கள்., 32 பேர் பரிதாப பலி., 123 பேர் படுகாயம்..! அசால்ட்டாக பொறுப்பேற்ற தாலீபன்.!!  - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த 19 வருடங்களாக உள்நாட்டு போரானது நடைபெற்று வரும் நிலையில்., இந்த போரை முடிவிற்கு கொண்டு வரும் பொருட்டு., தாலிபான் பயங்கரவாத அமைப்புடன்., நேரடியாக பேச்சுவார்த்தையை நடத்திய நிலையில்., இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் அமெரிக்காவின் படை மற்றும் ஆப்கானிஸ்தான் அரசு படை மீது தாலிபான்கள் தாக்குதலில் ஈடுபட்டதால்., அமெரிக்க அதிபரான ட்ரம்ப் பேச்சுவார்த்தையை முறித்துக்கொண்டு அறிவிப்பை வெளியிட்டார். 

இந்த தருணத்தில்., ஆப்கானிஸ்தான் நாட்டில் இரண்டு முறை ஏற்கனவே தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில்., நேற்று அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் போது பயங்கரவாதிகளின் அசம்பாவிதத்தை தவிர்க்கும் பொருட்டு., சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். இந்த தேர்தலில் மொத்தமாக 13 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில்., அங்குள்ள வட்டாரங்கள் நிலவரப்படி அதிபர் அஷ்ரப் கணிக்கும் - தலைமை நிர்வாகியான அப்துல்லாவிற்கும் தான் கடுமையாக போட்டி நிலவி வருவதாக தெரிகிறது. 

afghanistan voting,

தற்போது நடைபெறவுள்ள தேர்தலை சீர்குலைக்க தாலிபான்கள் திட்டம் தீட்டியுள்ளதாக அடுத்தடுத்து தகவல் வெளியானதை அடுத்து., வாக்குச்சாவடி மையங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு தேர்தல் நடைபெற துவங்கியது. இந்த தருணத்தில்., ஓட்டுப்பதிவு துவங்கிய சிறிது நேரத்திலேயே., அங்குள்ள காந்தஹார் வாக்குச்சாவடி மையத்தில் தீடீரென குண்டு வெடித்ததை அடுத்து., 16 பேர் சிக்கி பரிதாபமாக பரிதாபமாக படுகாயமடைந்தனர்.

இதனையடுத்து படுகாயமடைந்தவர்களை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்த நிலையில்., இதனை போன்று பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. என்ன நடந்தாலும் சரி என்ற முனைப்புடன் மக்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்து வந்தனர். தேர்தலில் போட்டியிடும் அதிபர் அஷ்ரப் கனி., காபூலில் இருக்கும் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்த பின்னர்., மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொண்டார். அங்குள்ள உள்ளூர் நேரப்படி காலையில் 7 மணிக்கு துவங்கிய தேர்தல்., 5 மணிக்கு முடிவடைந்த நிலையில்., 50 விழுக்காடு அளவிலான வாக்குகளை பெற்ற போட்டியாளர் வெற்றி வேட்பாளர் ஆவார். 

afghanistan voting,

இந்த தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில்., தேர்தலை அடுத்து பயங்கரவாதிகளின் வன்முறை சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறியுள்ளது. இந்த தேர்தல் நடைபெற்ற தருணத்தில்., ஆப்கானிஸ்தான் முழுவதும் சுமார் 132 இடங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் அரங்கேறியதாகவும்., இந்த தாக்குதலில் சுமார் 32 பரிதாபமாக உயிரிழந்த நிலையில்., 123 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அரங்கேறிய 132 தாக்குதல்களில் சுமார் 64 தாக்குதலுக்கு தாலிபான் அமைப்பானது பொறுப்பும் ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Afghanistan election 32 peoples died


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->