திரும்ப திரும்ப பேசுற நீ - வடிவேல் பாணியில்... அணுஆயுத எச்சரிக்கை விடுத்து., வம்பிற்கு இழுக்கும் இம்ரான்..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் பிரதமரான மோடி "தீவிரவாதத்திற்கு எதிராக உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் ஒன்று திரள வேண்டும்" என்று ஐக்கிய நாடுகளின் சபையில் பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்தார். இந்த சமயத்தில்., இதே கூட்டத்தில் உரையாற்றி இருந்த பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான்., காஷ்மீர் பிரச்சனை தொடர்பான விவகாரத்தில்., உலக நாடுகள் தலையிடாத பட்சத்தில்., அணுஆயுத போரானது வெடிக்கும் என்று தெரிவித்தார். 

74 ஆவது ஐக்கிய நாடுகளின் சபை கூட்டமானது தற்போது அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் நிலையில்., இந்த கூட்டத்தில் பங்கேற்றுக்கொண்ட இந்திய பிரதமர் மோடி பேசியதாவது., சுமார் 130 கோடி மக்களின் பிரதிநிதியாக தற்போது ஐக்கிய நாடுகளின் சபையில் உரையாற்றுவது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. 

modi, modi images,

சுமார் 3000 வருடங்களுக்கு முன்னதாக இந்தியாவில் வாழ்ந்து வந்த புலவரான கணியன் பூங்குன்றனார்., உலகின் தொன்மையான மற்றும் தனிச்சிறப்பு பெற்ற தமிழ் மொழியில் அன்றே "யாதும் ஊரே... யாவரும் கேளீர்" என்று கூறியிருந்தார். இதுவே இந்தியாவின் தனித்தன்மையாகும். தீவிரவாதத்தை பொருத்தளவு., இந்தியாவிற்கு மட்டும் அச்சுறுத்தல் உள்ளதாக கருத கூடாது. 

தீவிரவாதம் என்பது உலகளவில் உள்ள மனித இனத்திற்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. இதனால் பயங்கரவாதத்தை அழிப்பதற்கு., உலக நாடுகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும். மேலும்., சுமார் 125 வருடங்களுக்கு முன்னதாகவே சுவாமி.விவேகானந்தர்., அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் நல்லிணக்கம் மற்றும் அமைதியின் தேவை குறித்து பேசியதை நினைவில் கொள்கிறேன் என்று தெரிவித்தார். 

imran khan, imran, imran khan images,

மோடிக்கு பின்னர் பேசிய பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இம்ரான்கான்., பாகிஸ்தான் நாட்டில் எந்த விதமான தீவிரவாத அமைப்பும் இல்லை என்றும்., காஷ்மீரில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் பட்சத்தில்., காஷ்மீரில் இரத்த ஆறானது ஓடும். இரு நாடுகளும் அணுஆயுத போரினை கையில் எடுக்கும் பட்சத்தில்., உலக நாடுகளையும் இது பாதிக்கும். இதனால் மீண்டும் நான் எச்சரிக்கை விடுக்கிறேன் என்று தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

imrankhan speech against india in UN meeting


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->