இம்ரான் கானின் பொய்யான பேச்சை வாதத்தால் வெளுத்து வாங்கிய இந்திய பெண் அதிகாரி..! சரவெடி பேச்சு.! - Seithipunal
Seithipunal


ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இம்ரான் கான் காணொளி வாயிலாக கலந்துகொண்டு உரையாற்றினார். இதன்போது, காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டது தொடர்பாகவும், பிரிவினைவாத தலைவர் அலி ஷா கிலானி குறித்தும், இந்தியாவின் செயல்பாடுகள் குறித்தும் விமர்சனம் செய்து பேசினார். 

இம்ரானின் பேச்சுக்கு தாக்க பதிலடி வழங்கும் பொருட்டு, இந்தியா சார்பில் ஐ.நா கூட்டத்தில் கலந்துகொண்ட பெண் அதிகாரி சினேகா துபே (Sneha Dupey) அதிரடியாக பேசினார். அவர் பேசுகையில், " காஷ்மீர் என்றும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி ஆகும். இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகத்தான் காஷ்மீர் உள்ளது., இனியும் இருக்கும். 

பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்துள்ள பகுதிகளும் இதில் அடங்கும். பாகிஸ்தான் அரசு சட்டவிரோதமாக செய்துள்ள ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்து உடனடியாக வெளியேறவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். ஐ.நா மன்றத்தில் இம்ரானின் பேச்சு தவறானது. சர்வதேச மேடையை அவர் தவறாக உபயோகம் செய்து, இந்தியாவிற்கு எதிரான பிரச்சாரம் செய்கிறார். 

இந்தியாவின் மீது குற்றச்சாட்டினை முன்வைத்து, பாகிஸ்தான் மக்கள் படும் இன்னலை மறைக்க முயற்சி செய்கிறார். பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் எந்த விதமான பிரச்சனையும் இன்றி உலவுகிறார்கள். தீயணைப்பவர் போல வேடமிடும் பாகிஸ்தான், தீ வைப்பவராக உண்மையில் இருக்கிறது. 

பயங்கரவாத ஆதரவு மற்றும் பயிற்சி அளிப்பது, நிதி அளிப்பது, ஆயுதங்கள் வழங்குவது போன்ற விஷயத்தை பாகிஸ்தான் சர்வதேச அளவில் ஒப்புக்கொண்டு இருக்கிறது. பாகிஸ்தான் கொல்லைப்புறமாக பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிக்கிறது. இதனால் இந்தியா போன்ற உலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது " என்று அதிரடியாக பேசினார். 

சினேகா துபே கடந்த 2012 ஆம் வருட ஐ.எப்.எஸ் அதிகாரியும் ஆவார். தனது பள்ளிப்படிப்பை கோவா மற்றும் புனேவில் நிறைவு செய்த சினேகா துபே, உயர்கல்வியை பல்கலைக்கழகத்தில் பயின்றார். மேலும், 12 வயதில் இருந்து ஐ.எப்.எஸ் ஆசையை கொண்டிருந்த சினேகா, இந்தியாவின் ஐ.நா முதன்மை செயலாளராக பணியாற்றி வருகிறார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Imran Khan Against Speech at United Nations Assembly Indian UN Secretary Sneha Dupey


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->