அடுத்த கொரோனா தடுப்பூசி தயார்.. எப்போது சோதனை.? ராணுவ அமைச்சர் தகவல்..!! - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸ்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் முழு முயற்சியில் இறங்கி உள்ளது. அதில் இஸ்ரேலும் ஒன்று. இஸ்ரேலில் தடுப்பூசி உருவாக்கும் திட்ட நிலவரத்தின் முன்னேற்றம் குறித்து அறிவதற்காக ராணுவ அமைச்சர் பென்னி காண்ட்ஸ், தனது  அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் இஸ்ரேல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு நேற்று சென்றார். 

அங்கு இயக்குனர் பேராசிரியர் ஷபிராவை சந்தித்துப் பேசினார். இதையடுத்து பேராசிரியர் ஷபிரா ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கொரோனாவிற்கு ஒரு சிறந்த தடுப்பூசி கைவசம் உள்ளது. குறிப்பிட்ட கால அட்டவணை அடிப்படையில், தடுப்பூசி கடந்து செல்ல வேண்டிய ஒழுங்குமுறைகள், செயல்முறைகள் உள்ளது. 

இலையுதிர் கால விடுமுறைக்கு பின்னர் நாங்கள் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் சோதனைகளை தொடங்குவோம் என தெரிவித்துள்ளார். இது குறித்து ராணுவ அமைச்சர் பென்னி காண்ட்ஸ் கூறுகையில், இஸ்ரேல் உயிரியல் ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசியை, மனிதர்கள் செலுத்திப் பார்க்கும் சோதனை இலையுதிர்காலம் விடுமுறைக்கு பின்னர் தொடங்கும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Iisrael corona vaccine


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->