சூறையாடிய சூறாவளி காற்று, ஒரு லட்சம் வீடுகளின் மின் இணைப்பு துண்டிப்பு.! - Seithipunal
Seithipunal


அமெரிக்க நாட்டில் டல்லாஸ் என்னும் நகரில் நேற்று இரவு பயங்கர சூறாவளி தாக்கி மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் சுமார் ஒரு லட்சம் வீடுகள் இருளில் மூழ்கியது.

டெக்சாஸ் மாநிலத்தில் அமைந்துள்ள டல்லாஸ் நகரில் நேற்றிரவு இடிமின்னலுடன் கூடிய பலத்த சூறாவளி காற்று பயங்கரமாக வீசியது. மேலும் சுழன்றடித்த இந்த சூறைக்காற்றில், மரங்கள், கட்டிடங்கள் இடிந்தது மட்டுமல்லாமல், வாகனங்களும் சேதமடைந்தது. இந்த நகரின் வடக்கு பகுதியில் உள்ள விமான நிலையத்தையும் சூறாவளி சூறையாடியது.

இதை தொடர்ந்து, முன் எச்சரிக்கையாக, சுமார் ஒரு லட்சம் வீடுகளின் மின் இணைப்புகள் தற்காலிகமாக துண்டிக்கப் பட்டுள்ளது. மேலும் சில விமான நிலையங்கள் மூடப்பட்டதோடு, விமானங்களும் தாமதமாக இயக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

i lakhs house power cut in america for cyclone


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->