தனது காதலனுடன் உல்லாசமாக இருக்க மனைவியை போட்டு தள்ளிய கணவன்.! வெளியான அதிரவைக்கும் தகவல்கள்.! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தின் வடக்குப் பகுதியில் உள்ள மிட்டில்ஸ்பரோ பகுதியில் வசித்து வந்தவர் மிதேஷ் படேல் இவரது மனைவி ஜெசிகா படேல். இவர்கள்  இருவரும் ஒன்றாக சேர்ந்து அதே பகுதியில் மருந்தகம் ஒன்றை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு ஜெசிகா வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது தனது மனைவியை மர்மநபர்கள் கொலை செய்துவிட்டு பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர் என கூறியுள்ளார்.

இந்நிலையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டபோது, மிதேஷ், அமித் என்ற டாக்டருடன் பழக்கமாகி, இருவரும் ஓரின சேர்க்கையாளர்களாக இருப்பது தெரியவந்தது.

மேலும் தனது மனைவியின் பெயரில் நிறைய இன்சூரன்ஸ்கள் இருப்பதால், அவரை கொலை செய்துவிட்டு அப்பணத்தை கொண்டு  தனது ஓரின சேர்க்கை  காதலன் அமித் படேலுடன் ஆஸ்திரேலியாவில் குடியேறி சந்தோஷமாக வாழ மிதேஷ் திட்டமிட்டுள்ளார்.
 
அதனால்  பிளாஸ்டிக் பை ஒன்றை வாங்கி தமது மனைவியின் முகத்தை மூடி, அவருக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்தி கொலை செய்ததும் விசாரணையில் உறுதியானது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

English Summary

husband kill wife for homosexual lover


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal