ஊடரங்கு இல்லாமலேயே இந்த நாட்டில் மட்டும் கொரோனா கட்டுக்குள் வந்தது எப்படி? வெளியான தகவல்!! - Seithipunal
Seithipunal


தற்போது உலக நாடுகளில் பரவி வரும் கரோனா வைரஸ் காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் நிலையில் இருக்கிறார்கள். ஆனால் தென் கொரியா நாடு மட்டும் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்காமல் சமாளித்து வருகிறது.

இந்த நாட்டில் பள்ளி, கல்லூரிகள் மட்டுமே மூடப்பட்டது. மற்றபடி திரையரங்குகள், மால்கள், கடைகள் போன்ற அனைத்து பொது இடங்களும் திறந்தேயிருந்தது. தென்கொரியாவில் வைரசால் சுமார் 10 ஆயிரம் நபர்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அவர்களில் 5000 பேர் விரைவாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

அந்நாட்டில் இதுவரை 144 நபர்கள் மட்டுமே பலியாகியுள்ளனர். எப்படி இவர்கள் மட்டும் கொரோனாவை கட்டுக்குள் வைத்து இருக்கிறார்கள்? என்று பார்த்தால், இதற்கு காரணம் அந்நாட்டில் கரோனா வைரஸ் அறிகுறியுடன் இருப்பவர்கள் விரைவில் கண்டுபிடிக்க படுகிறார்கள். பின்னர் அவர்கள் எங்கெல்லாம் சென்றார்கள் என்பதை ஜிபிஎஸ் மூலம் கண்டறிந்து அதன்மூலம் அங்கிருக்கும் சிசிடிவி கேமரா மூலம் அந்த நபர் யாரையெல்லாம் தொடர்பு கொண்டுள்ளார் என்பதையும் கண்டறிந்து உடனே அந்த நபர்களை தனிமைப்படுத்த படுகிறார்கள்.

பின்னர் அவர்களுக்கு கொரோனா அறிகுறி இல்லை என்றால் அவர்களை தவிர்த்து அறிகுறி உள்ளவர்களை வீட்டிலேயே தனிமைப் படுத்தப்படுகிறார்கள். இதைவிட முக்கியமான ஒன்று தென்கொரியா நாட்டு பொதுமக்களும் அரசின் இந்த முயற்சிக்கு 100% ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள்.

மேலும் வைரஸ் பாதிப்பு அறிகுறி இருப்பதாக தெரிந்தால் அந்நாட்டு மக்களே முன்வந்து அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்கிறார்கள். இதனால் தான் ஊரடங்கு உத்தரவு இல்லாமலேயே ஒவ்வொருவரும் தங்களை தானே தனிமைப்படுத்திக் கொள்வதால் தான் கொரோனாவிற்கு சிறந்த தீர்வாக அந்நாட்டில் அமைந்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how south Korea control corona virus 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->