வியப்பூட்டும் வினோதமான ஓட்டல்! ஆண்களின் கடுமையான எதிர்ப்பால் உரிமையாளர் எடுத்த அதிரடி முடிவு!! - Seithipunal
Seithipunalஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் கடந்த 2017-ம் ஆண்டு ஹன்ட்சம் ஹெர் அதாவது அவள் அழகானவள்என்ற அர்த்தத்துடன் கூடிய  பெயரில் ஓட்டல் ஒன்றை பெண்கள் பலர் சேர்ந்து தொடக்கி வெற்றிகரமாக நடத்தினர்.

மேலும் இந்த ஓட்டலில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துக்கப்பட்டது. பெண்களின் முன்னுரிமைகள் அளிக்கப்பட்டு அவர்களுக்கு இருக்கைகள் நிறைந்த பிறகு, மீதி இடமிருந்தால் மட்டும் ஆண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

அதுமட்டுமின்றி பெண்களுக்கு வழங்குவதை விட்டான் ஆண்கள் சாப்பிடும் உணவுக்கு கூடுதலாக 18 சதவீதம் வரியம் வசூல் செய்யப்பட்டது. மேலும் இந்த தொகை பெண்களுக்கான நலத்திட்டங்களுக்காக செலவிடப்பட்ட வந்தது.

இந்நிலையில் பெண்களால் மட்டுமே வெற்றிகரமாக நடத்தபட்ட இந்த ஓட்டலுக்கு பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.அனால் ஆண்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்த ஓட்டல் குறித்து தவறான விமர்சனங்களையும் சிலர் சமூகவலைதளங்களில் பரப்பினர் 

இதனால்  ஓட்டலுக்கு வருபவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்தது. இந்த நிலையில், இந்த ஓட்டலை நாளை மூடுவதாக அதன் உரிமையாளர்கள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

மேலும் அவர்கள் ஆண்களின் எதிர்ப்புக்கு பயந்தோ அல்லது  பணம் சாம்பாதிக்க முடியவில்லை என்பதாலோ நங்கள் ஓட்டலை மூடவில்லை என பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

English Summary

hotel maintained by girls closed by boys obosite comments


கருத்துக் கணிப்பு

கர்நாடக காவேரியில் தண்ணீர் திறப்பதன் காரணம்?
கருத்துக் கணிப்பு

கர்நாடக காவேரியில் தண்ணீர் திறப்பதன் காரணம்?
Seithipunal