சொகுசு ஹோட்டலாக மாறி வரும் ஹிட்லர் படைகள் பயன்படுத்திய பதுங்கு குழி.! - Seithipunal
Seithipunal


இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் படைகள் பதுங்குவதற்காக பயன்படுத்திய குழி ஒன்று தற்போது சொகுசு ஹோட்டலாக மாறியுள்ளது.

ஜெர்மனியில் அமைந்துள்ள ஹம்பர்க்கின் செயின்ட் பாலி என்னும் மாகணத்தில் இருக்கின்ற ஹோச்பங்கர் என்னும் இடத்தை பதுங்கு குழிகளாக நாஜி படையினர் பயன்படுத்தி வந்தார்கள்.

1942ம் ஆண்டு 300 நாட்களில் கட்டப்பட்ட இந்த பிரமாண்டமான பதுங்கு குழி நாஜிக்கள் தோற்கடிக்கப்பட்ட 3 ஆண்டுகளுக்கு பின்னரே கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் இந்தப் பதுங்கு குழி தொலைக்காட்சி நிலையம், பிற வணிக வளாகமாக மாற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் என் ஹெச் ஹோட்டல் என்னும் குழுமம் இந்த இடத்தை வாங்கி அங்கு மிகவும் ஆடம்பரமான ஹோட்டலைக் கட்டி வருகிறது.

136 அறைகள் கொண்ட இந்த ஹோட்டலில் தங்குவதற்கு ஒரு இரவுக்கு 100 யூரோக்கள் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டல் 2021ம் ஆண்டு திறக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hotel built in hitler's secret place at jermany


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->