முழு வீச்சில் தயாரான சீனா.. நிறைவேறும் மசோதா.. பதறும் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


சீன நாட்டின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் தன்னை பெற்ற பகுதியாக இருந்து வரும் ஹாங்காங்கில், ஜனநாயக ஆதரவு தொடர்பாக நீண்ட வருடமாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மேலும், ஹாங்காங்கில் குற்ற வழக்கில் கைது செய்யப்படும் நபர்களை சீன நாட்டிற்கு நாடு கடத்தும் சட்டத்திற்கு எதிராகவும், ஜனநாயக சீர்திருத்தத்தை வலியுறுத்தியும் பல போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இந்த போராட்டங்கள் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டின் தூண்டுதலின் பெயரில் நடந்து வருவதாக சீனா தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்றது. இந்நிலையில், ஹாங்காங்கில் சட்ட, ஆட்சியமைப்பு மாற்றங்கள் செய்யும் தேசிய பாதுகாப்பு மசோதா சீனாவின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இது குறித்த புதிய மசோதாவில் பிரிவினைகள் மற்றும் தேசவிரோத செயல்களை தடுக்க கூடுதலாக சட்டங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஹாங்காங்கில் வெளிநாட்டு தலையீடு, ஹாங்காங் நகரில் பயங்கரவாதத்தில் ஈடுபடுதல் போன்ற விசயத்திற்கு எதிரான அம்சமும் மசோதாவில் இடம்பெற்றுள்ளது. இந்த மசோதா சீன நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளதன் காரணமாக சட்டமாக மாறியுள்ளது.

இந்த சட்டத்தின் மூலமாக ஹாங்காங் அரசின் அனுமதியில்லாமல் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கையை சீனா நேரடியாக மேற்கொள்ளும் வாய்ப்புகளும் உருவாகியுள்ளது. இதனால் ஹாங்காங்கின் சுதந்திர சுய ஆட்சி முடிவிற்கு வரும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதனால் மக்களிடம் போராட்டம் வெடிக்கும் என்ற வாய்ப்புகள் அதிகளவு உள்ளதால், ஹாங்காங்கில் சீனா தனது தேசிய பாதுகாப்பு அமைப்பை நிறுவ இருக்கிறது.

இவ்வாறாக தேசிய பாதுகாப்பு அமைப்பை ஹாங்காங்கில் நிறுவும் பட்சத்தில், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. போராட்டக்காரர்கள் அனைவரும் சிறையில் தள்ளப்படும் வாய்ப்பும் அதிகரிக்கும். இதனால் சீனாவிற்கு எதிரான மிகப்பெரிய போராட்டமானது ஹாங்காங்கில் நடைபெற வாய்ப்புகள் உள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hong Kong China bill pass in China Parliament


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->