மேக் அப் ரூமை பெட் ரூமாக மாற்றிய பிரபல தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் விதித்த தண்டனை!! - Seithipunal
Seithipunal


நியூயார்க் (ராய்ட்டர்ஸ்) - ஹார்வி வெய்ன்ஸ்டீன் என்னும் பிரபல ஹாலிவுட் டைரக்டர் ஒருவர் மீது பிரபலமான நடிகைகள் உட்பட மொத்தம் 80 க்கும் மேலான பெண்கள் மீ டூ வில் பாலியல் புகார் தெரிவித்திருக்கிறார்களா. இதை தொடர்ந்து, நடிகை அன்னபெல்லா சியோரா அவர் மீது, மேக் அப் ரூமில் தன் தலைக்கு பின்னால் கைகளை பிடித்து கட்டிவிட்டு, 25 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்ததாக வியாழக்கிழமை நீதிபதிகள் முன்பு  சாட்சியம் அளித்திருந்தார்.

அந்த வகையில், முன்னாள் ஹாலிவுட் தயாரிப்பாளரும் இயக்குனருமான வெய்ன்ஸ்டின் மீது  நடந்த பாலியல் குற்றச்சாட்டு விசாரணையின் பொது இதனை தெரிவித்தார். அவரிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது, என்னை மீறி அவர் என்னுடன் உடலுறவு கொண்டார். மேலும், எனது கைகள் கட்டிருப்பதால் என்னால் அவரிடம் சண்டையிட முடியவில்லை, என்று அவர் ஏழு ஆண்கள் மற்றும் ஐந்து பெண்களைக் கொண்ட நியூயார்க் நடுவர் மன்றத்திடம் தெரிவித்தார். 

கோர்ட் மேஜையில் உட்கார்ந்திருந்த வெய்ன்ஸ்டீன், விசாரணையின் போது குறிப்புகளை எடுத்தார். 67 வயதான வெய்ன்ஸ்டீன், மிமி ஹேலி மற்றும் ஜெசிகா மான் ஆகிய இரு பெண்களை பலாத்காரம் செய்த  குற்றச்சாட்டில் தான் குற்றவாளி அல்ல என்றும், நடிகைகளுடனான தனது பாலியல் உறவுகள் அனைத்தும் அவர்கள் சம்மதத்துடன்தான் நடந்தது என்று அவர் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டு, ரைக்கர்ஸ் தீவு சிறைக்கு அழைத்து சென்று அடைக்கப்பட்டார். இதை தொடர்ந்து வருகின்ற, 11 ஆம் தேதி தண்டனை விவரம் வெளியிடப்படும் வரை, அந்த சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், தற்போது அவருக்கு 23 வருடம் சிறை தண்டனையளித்து அமெரிக்காவின் நியூயார்க் நகர நீதிமன்றம் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hollywood producer harvey weinstein got punished 23 years jail


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->