2 நாட்கள் கொட்டி தீர்த்த கன மழை.. ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.. 12 பேர் பலி.!! - Seithipunal
Seithipunal


நேபாளத்தில் பெய்த கனமழையால் அந்நாட்டில் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, மைக்டி, ஜஜர்கோட், சிந்துபல்சோக் ஆகிய மூன்று மாவட்டங்கள் பல வருடங்கள் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலச்சரிவில் சிக்கி 50க்கும் மேற்பட்டோரை காணவில்லை. அவர்களை தேடும் பணியில் அந்நாட்டு மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கியவர்களில் 12 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும், மாயமான பலரை மீட்பு பணியில் தீவிரமாக தேடி வருகின்றனர். நேபாளத்தில் கடந்த 2 நாட்களாக கன மழை கொட்டி வருவதால் நாட்டில் ஓடும் முக்கிய நதிகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

மேலும், மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என அந்நாட்டு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த கனமழையால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு சில வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

heavy rain in nepal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->