கரைபுரண்டு ஓடும் வெள்ளம்.. தூக்கி வீசப்பட்ட கார்கள்..முடங்கி கிடக்கும் மக்கள்..! - Seithipunal
Seithipunal


அமெரிக்க நாட்டில் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளபெருக்கில், கார்கள் அடித்து செல்லப்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில், எதிர்பாராத மழைப்பொழிவு காரணமாக, தெற்கு கலிபோர்னியா பகுதிகளில் கடும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும், ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மற்றும் வாகனங்களை வாரி சுருட்டி கொண்டு சென்றது.

இதை தொடர்ந்து, தெற்கு கலிபோர்னியாவில் சுமார் 6க்கும் மேற்பட்ட நகரங்களில் கடும் மழை கொட்டி வருகிறது. மேலும் இந்த நாட்டின் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக ஏராளமான சாலைகள் மூடப்பட்டு இருக்கிறது. அரிசோனா மாகாணத்திலும் கனமழை காரணமாக, வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதனால் மக்கள் வெளியே வர முடியாமல் வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறார்கள். இந்த காட்சிகள் சமூகவலை தளங்களில் ஒருவர் வீடியோ எடுத்து வைரலாக பரவி கொண்டிருக்கிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

heavy rain destroy cars


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->